பெரம்பலூரில் அழுகிய நிலையில் பெண் சடலம்; இறந்து ஒரு வாரத்திற்கு மேலாச்சாம்...

 
Published : May 28, 2018, 10:00 AM ISTUpdated : Sep 19, 2018, 02:26 AM IST
பெரம்பலூரில் அழுகிய நிலையில் பெண் சடலம்; இறந்து ஒரு வாரத்திற்கு மேலாச்சாம்...

சுருக்கம்

rotten Woman body in Perambalur Die for one week

பெரம்பலூர்

பெரம்பலூரில் இறந்து ஒரு வாரத்திற்கும் மேலான அழுகிய நிலையில் பெண் சடலம் ஒன்று கிடந்தது. இதுகுறித்து காவலாளர்கள் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

பெரம்பலூர் மாவட்டம், மேலப்புலியூர் கிராமத்தில் உள்ள மலையடிவாரத்தில் அழுகிய நிலையில் பெண் சடலம் கிடக்கிறது என்ற தகவல் பெரம்பலூர் காவலாளர்களுக்கு தகவல் கிடைத்தது. 

இதனையடுத்து, சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற காவலாளர்கள் விசாரணை மேற்கொண்டனர். அதில், இறந்து கிடந்தவர் பாளையம் கிராமத்தைச் சேர்ந்த மருதமுத்து மனைவி மருதாம்பாள் (65) என்பதும், உயிரிழந்து ஒருவாரத்திற்கும் மேலாக இருக்கும் என்பது தெரியவந்தது.

இதனையடுத்து, மருத்துவர்களின் உடற்கூராய்வுக்கு உட்படுத்தப்பட்ட அந்த சடலம் அதே இடத்தில் அடக்கம் செய்யப்பட்டது. இதுகுறித்த புகாரின்பேரில் பெரம்பலூர் காவலாளர்கள் வழக்குப் பதிந்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
 

PREV
click me!

Recommended Stories

11 படுதோல்வி.. பழனிசாமி பெயரைச் சொல்லவே வெட்கமா இருக்கு! கோபத்தில் கொப்பளித்த ஓபிஎஸ்!
இபிஎஸ்.. ஸ்டாலின்.. விஜய்... யார் முதல்வரானாலும் மக்கள் அந்த கொடூரத்தை அனுபவிப்பார்கள்..! பீதி கிளப்பும் உண்மை..!