மன்னிப்பு கேட்க மறுப்பு.! 'தக் லைஃப்' வெளியீடு ஒத்திவைப்பு- கமல் அதிரடி அறிவிப்பு

Published : Jun 03, 2025, 03:25 PM ISTUpdated : Jun 03, 2025, 03:32 PM IST
Thug Life

சுருக்கம்

நடிகர் கமல்ஹாசனின் 'தக் லைஃப்' திரைப்படம் கன்னட மொழி தொடர்பான கருத்துக்களால் சர்ச்சையில் சிக்கியுள்ளது. கன்னட மக்களின் மனதை புண்படுத்தியதற்காக மன்னிப்பு கேட்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆனால் கமல் மன்னிப்பு கேட்க மறுத்துள்ளார்.

மன்னிப்பு கேட்க மறுத்த கமல் : நடிகர் கமல்ஹாசன் நடித்த 'தக் லைஃப்' திரைப்படம் வருகிற 5ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகவுள்ளது. இந்த படத்தின் புரோமோஷன் நிகழ்வுக்காக கர்நாடகா சென்ற நடிகர் கமல்ஹாசன், கன்னட மொழி தொடர்பாக கருத்தை தெரிவித்திருந்தார். இதற்கு அங்குள்ள அரசாங்கம் முதல் கன்னட அமைப்பு வரை கடும் கண்டனத்தை தெரிவித்தது. 'தக் லைஃப்' திரைப்படத்தை வெளியிட மாட்டோம் எனவும் கமல் மன்னிப்பு கேட்க வேண்டும் என தெரிவித்திருந்தது. 

கமலை மன்னிப்பு கேட்க வற்புறுத்திய நீதிமன்றம்

இந்த நிலையில் 'தக் லைஃப்' வெளியீட்டிற்கு பாதுகாப்பு வழங்கக் கோரி டிஜிபி, காவல் ஆணையருக்கு உத்தரவிடக் கோரிய கமல்ஹாசன் மனு கர்நாடகா உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. நீதிபதி எம். நாகபிரசன்னா தலைமையிலான அமர்வு இந்த வழக்கை விசாரித்து கமல்ஹாசனைக் கடுமையாகக் கண்டித்தது. கன்னடம் தமிழில் இருந்து பிறந்தது என்று கமல் கூறியுள்ளார். அவர் வரலாற்று ஆய்வாளரா? கன்னட மக்களின் மனம் புண்படுகிறது. கமல் மன்னிப்பு கேட்க வேண்டும். மன்னிப்பு கேட்டால் மனு பரிசீலிக்கப்படும் என தெரிவித்தனர். நீங்களே பிரச்னையை உருவாக்கிவிட்டு பாதுகாப்பு கேட்கிறீர்கள் என கேள்வி எழுப்பினார். 

கமல் சாதாரண மனிதர் அல்ல, பொது நபர். கமல் தனது கருத்தை மறுக்கவில்லை, சொன்னது சரி என்கிறார். இப்போது படம் ஓட வேண்டும் எனக் கேட்கிறார். பல கோடி முதலீடு செய்திருக்கலாம், ஆனால் கன்னட மக்களின் மனம் புண்பட்டுள்ளது. எனவே மன்னிப்பு தொடர்பாக முடிவெடுங்கள் எனக்கூறி வழக்கு விசாரணையை பிற்பகல் ஒத்திவைக்கப்பட்டது. இதற்கிடையே கமல் வெளியிட்டிருந்த அறிக்கையில், புகழ்பெற்ற டாக்டர் ராஜ்குமாரின் குடும்பத்தினர் மீது, குறிப்பாக சிவ ராஜ்குமார் மீது உண்மையான பாசத்துடன் தக் லைஃப் ஆடியோ வெளியீட்டு விழாவில் நான் பேசியது தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டது எனக்கு வேதனை அளிக்கிறது. 

கன்னடத்தை குறைத்து மதிப்பிடவில்லை- கமல்

நான் சொன்ன வார்த்தைகள் கன்னடத்தை எந்த வகையிலும் குறைத்து மதிப்பிடுவது அல்ல, என தெரிவித்திருந்தார். மேலும் நாம் அனைவரும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் என்பதை உணர்த்துவதற்காக சொன்னவை. கன்னட மொழியின் வளமான பாரம்பரியம் குறித்து எந்த சர்ச்சையோ விவாதமோ இல்லை என தெரிவித்தார்.

'தக் லைஃப்' திரைப்படம் வெளியாவது ஒத்திவைக்கப்படுகிறது

இதனிடையே இன்று பிற்பகல் இந்த வழக்கு விசாரணை மீண்டும் வந்த போது கமல் ஏன் தனது கடிதத்தில் மன்னிப்பு என்ற வார்த்தையை குறிப்பிடவில்லையென நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். மேலும் கமலை ஈகோ தடுப்பதுவதாகவும் தெரிவித்திருந்தனர். இதனையடுத்து கர்நாடகாவில் 'தக் லைஃப்' திரைப்படம் வெளியாவது ஒத்திவைக்கப்படுவதாக கமல் சார்பாக வழக்கறிஞர்கள் நீதிமன்றத்தில் தெரிவித்தனர். இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் வழக்கு விசாரணையை ஜூன் 10ஆம் தேதி ஒத்தி வைத்தனர்.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

அமைதியும், நம்பிக்கையும் மிகுந்த தமிழ்நாட்டைக் கண்டு பாஜக ஏன் பயப்படுகிறது? அமைச்சர் கேள்வி
கோவை லேடிஸ் ஹாஸ்டலில் அதிர்ச்சி! மாடியில் இருந்து குதித்த இளம்பெண்ணின் நிலை என்ன? இதுதான் காரணமாக?