
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புத்தூர் அருகே விஷவாயு தாக்கி 3 பேர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் இரண்டு பேர் கவலைக்கிடமாக உள்ளனர்.
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புத்தூர் அருகே போந்தூர் பகுதியில் தனியார் உணவகம் ஒன்று இயங்கி வருகிறது.
இங்கு கழிவு நீர் தொட்டியை சுத்தம் செய்ய ஹோட்டல் ஊழியர்கள் தொட்டிக்குள் இறங்கியுள்ளனர். அப்போது திடீரென அவர்களை விஷவாயு தாக்கியது.
இதில் சம்பவ இடத்திலேயே 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 2 பேர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தகவலறிந்து வந்த மீட்பு படையினர் இறந்தவர்களின் உடல்களை மீட்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இறந்தவர்களின் விவரம் குறித்து இதுவரை எந்த தகவலும் தெரிவிக்கப்படவில்லை. தகவலறிந்து வந்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதுகுறித்து ஹோட்டல் உரிமையாளரை போலீசார் கைது விசாரணை நடத்துகின்றனர்.