அனுமதி பெறாத மூன்று குடிநீர் சுத்திகரிப்பு நிறுவனங்களுக்கு சீல் வைத்து வருவாய்த் துறையினர் அதிரடி…

First Published Jun 14, 2017, 7:48 AM IST
Highlights
Three drinking water refineries companies that are sealed by revenue department


திருவள்ளூர்

திருவள்ளூரில் சோதனை மேற்கொண்ட வருவாய்த் துறையினர் அனுமதி பெறாமல் செயல்பட்டு வந்த மூன்று குடிநீர் சுத்திகரிப்பு நிறுவனங்கலுக்கு சீல் வைத்து அதிரடி காட்டினர்.

திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி வட்டம், நல்லூர் கிராமத்தில் அனுமதி பெறாத கட்டடத்தில் குடிநீர் சுத்திகரிப்பு ஆலைகள் செயல்பட்டு வருவதாக பொன்னேரி வட்டாட்சியர் அலுவலகத்திற்கு புகார்கள் வந்த வண்ணம் இருந்தது.

இதனையடுத்து, பொன்னேரி வருவாய்த் துறையினர், சோழவரம் ஊராட்சி ஒன்றிய அதிகாரிகள் நல்லூர் கிராமத்திற்கு சென்று சம்பந்தப்பட்ட குடிநீர் நிறுவனங்களை சோதனை செய்தனர்.

அப்போது, சிவந்தி ஆதித்தன் நகர், அறிஞர் அண்ணா தெரு உள்ளிட்ட பகுதிகளில் மூன்று நிறுவனங்கள் ஊராட்சி நிர்வாகத்திடம் உரிய கட்டட அனுமதி பெறாமல் செயல்பட்டு வந்தது உறுதிப்படுத்தப்பட்டது.

இதனையடுத்து, அந்த மூன்று நிறுவனங்களையும் அதிகாரிகள் பூட்டி, 'சீல்' வைத்தனர்.

மேலும், அதேப் பகுதயில் நிலத்தடி நீர் எடுக்கப் பயன்படுத்திய 11 மின் மோட்டார்களையும் பறிமுதல் செய்து, சோழவரம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.

அதிகாரிகளின் இந்த சோதனையால் அனுமதி பெறாத குடிநீர் நிறுவன கட்டிடங்களுக்கு சீல் வைத்ததை மக்கள் வரவேற்றனர். அதேசமயம் மற்றப் பகுதிகளின் பல குடிநீர் நிறுவனங்களிலும் சோதனை மேற்கொண்டு களை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர்.

click me!