
மீண்டும் மெரினா போராட்டமா..? களமிறங்கும் இளைஞர்கள்... “அவசர அவசரமாக” குவிக்கப்பட்ட போலீசார்...
ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராக, டெல்லியில் விவசாயிகள் தொடர்ந்து போராடி வருகின்றனர். இவர்களுக்காக உத்தர பிரதேச மாநில விவசாயிகளும் ஆதரவு கொடுத்து வருகிறார்கள்.
தமிழகத்தில் இருந்து ஒரு சில அரசியல் கட்சி தலைவர்கள் ஆதரவு குரல் கொடுத்தாலும் மாபெரும் ஆதரவு இன்றைய இளைஞர்களின் மனதில் எழுந்துள்ளது . அதனை நிரூபிக்கும் விதமாக ஏற்கனவே ஜல்லிகட்டுகாக போராடிய தமிழக இளைஞர்கள் மீண்டும் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிராகவும் விவசாய பெருமக்களுக்கு ஆதரவாகவும் மெரினாவில் போராட்ட களத்தில் குதிக்க ஆங்காங்கு தயாராகி வருவதாக சமூக வலைதலங்களில் பதிவிட்டு வருகிறார்கள் .
இந்த தகவலால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீசார் பட்டாளம் மெரினாவில் குவிக்கப்பட்டுள்ளது
நெடுவாசல் விவசாயிகளுக்காவும், டெல்லியில் போராடும் தமிழக விவசாயிகளுக்கு ஆதரவு தரும் பொருட்டு இந்த போராட்டம் நடைப்பெற வாய்ப்புள்ளதாக தெரிகிறது. இதன் தொடர்ச்சியாக , மெரினாவில் உள்ள கடைகளை மூட அறிவுறுத்தியும், பொதுமக்களை வெளியேற்றியும் வருகிறது காவல்துறை.
ஒரு வேளை மீண்டும் மெரினாவில் போராட்டம் நடந்தால் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலையும் என கருதப் படுவதால் அவசர அவசரமாக போலீசார் அவர்கள் பணியில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர் .