மத்திய அரசிடம் விவசாயிகளுக்காக பேச்சுவார்த்தை நடத்துவோம் - அமைச்சர் துரைகண்ணு தகவல்

 
Published : Mar 28, 2017, 02:43 PM ISTUpdated : Sep 19, 2018, 03:05 AM IST
மத்திய அரசிடம் விவசாயிகளுக்காக பேச்சுவார்த்தை நடத்துவோம் - அமைச்சர் துரைகண்ணு தகவல்

சுருக்கம்

minister duraikannu says that he will talk to central government

கடந்த  2 வாரமாக தமிழக விவசாயிகள் டெல்லி ஜந்தர் மந்தர் மைதானத்தில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

விவசாய கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும். நீர் பாசன வசதிக்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். காவிரி மேலாண்மை அமைக்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வருகின்றனர்.

தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகளுக்கு ஆதரவாக தமிழகத்தில் உள்ள அனைதது கட்சியினர், சினிமா நட்சத்திரங்கள் மட்டுமின்றி, உத்தரபிரதேசம் உள்ளிட்ட வடமாநில விவசாயிகளும் ஆதரவு தெரிவித்து வருகின்றனர். இதனால், ஜந்தர் மந்தர் மைதானத்தில் ஆயிரக்கணக்கானோர் தற்போது திரண்டுள்ளனர்.

இந்நிலையில், தமிழக விவசாயத்துறை அமைச்சர் துரைகண்ணு, மாநிலங்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை ஆகியோர் டெல்லி சென்று விவசாயிகளை சந்தித்து பேசினார்.

அப்போது, போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவிப்பதாகவும், இதுகுறித்து மத்திய அரசிடம் பேசி, உரிய நடவடிக்கை எடுப்பதாகவும் உறுதியளித்தார்.

பின்னர், அமைச்சர் துரைகண்ணு செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

வறட்சி நிவாரணம், கடன் தள்ளுபடி உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அய்யாகண்ணு தலைமையில், விவசாயிகள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். போராட்டம் நடத்தும் விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் கிடைக்க, மத்திய அரசிடம் பேச்சு வார்த்தை நடத்துவோம்.

இதற்காக மத்திய விவசாய துறை அமைச்சர், பிரதமர் மற்றும் ஜனாதிபதியை சந்தித்து முறையிட இருக்கிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

PREV
click me!

Recommended Stories

ரயிலில் டிக்கெட் கிடைக்கலையா? டோன்ட் வொரி.. கிறிஸ்துமஸ் விடுமுறை சிறப்பு பேருந்துகள்.. முழு விவரம் இதோ!
GEN Z வாக்குகளுக்கு குறிவைத்த திமுக! மா.செ.களுக்கு ஸ்டாலின் முக்கிய உத்தரவு! விஜய் ஷாக்!