ஹைட்ரோ கார்பன் திட்டம்... லாபம் என்ன? நஷ்டம் என்ன? - ஓர் அலசல்

First Published Mar 28, 2017, 12:58 PM IST
Highlights
merits and demerits of hydrocarbon project


இந்தியாவில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசு கடந்த பிப்ரவரி மாதம் ஒப்புதல் அளித்தது. இது தொடர்பாக மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சகம் சாட்பில் டெண்டர் விடப்பட்டது. இதில் நூற்றுக்கணக்கான நிறுவனங்கள் விண்ணப்பித்தன.

அவற்றில் 17 தனியார் நிறுவனங்களும் 4 பொதுத்துறை நிறுவனங்களும் ஒரு வெளிநாட்டு நிறுவனமும் உள்ளிட்ட 22 நிறுவனங்களுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

அசாம் மாநிலத்தில் 9 இடங்கள், குஜராத்தில் 5 இடங்கள், ஆந்திராவில் 4 இடங்கள், ராஜஸ்தானில் 2 இடங்கள், மும்பை கடல் பகுதியில் 6 இடங்கள் மற்றும் தமிழ்நாட்டில் புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசல், புதுச்சேரி மாநிலம் காரைக்கால் உள்ளிட்ட நாடு முழுவதும் 31 இடங்கள் தேர்வு செய்யப்பட்டு பூமிக்கு அடியில் இருந்து ஹைட்ரோ கார்பன் எரிவாயு எடுக்க முடிவு செய்யப்பட்டது.

 இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டால் அரசுக்கு சுமார் ரூபாய் 46 ஆயிரத்து 400 கோடி வருமானம் கிடைப்பதுடன் 37 ஆயிரத்து 500 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.  

ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்த மத்திய மற்றும் மாநில அரசுத்துறைகளிடம் இருந்து சுற்றுச்சூழல் உள்ளிட்ட பல்வேறு அனுமதிகளை பெறுவதற்கு குறைந்தபட்சம் 6 மாத காலம் தேவைப்படும். சம்மந்தப்பட்ட மாநில அரசின் அனுமதி இன்றி இத்திட்டம் செயல்படுத்த முடியாது.

ஹைட்ரோ கார்பன் திட்டம் செயல்படுத்தப்பட்டால் விவசாயம் பாதிப்படை வதுடன், நிலத்தடி நீர் வீணாகும் என்றும் சுற்றுச்சுழல் பாதிப்பு ஏற்படும் என்று நெடுவாசல் பகுதி மக்கள் இத்திட்டத்திற்கு எதிப்பு தெரிவித்தனர். அவர்களிடம் மத்திய அமைச்சர்கள் பேச்சு வார்த்தை நடத்தியும் தேல்வியில் முடிந்தன.

இதனிடையே ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு மத்திய பெட்ரோலிய துறை அமைச்சர் சம்மந்தப்பட்ட நிறுவனங்களை அழைத்து கையெழுத்திடப்பட்டது. இத்திட்டத்திற்கு எதிப்பு தெரிவித்து போராட்டம் நடத்திவரும் நெடுவாசல் கிராம மக்கள் நேற்று மத்திய அரசின் கையெழுத்தினால் போராட்டத்தை தீவிரபடுத்த முடிவுசெய்துள்ளனர்.

இதனிடையில் மத்திய பெட்ரோலிய துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறுகையில் இத்திட்டம் குறித்து நெடுவாசல் பகுதி மக்களுக்கு விளக்கம் அளித்து பின்னர் அவர்களின் ஒத்துழைப்போடு செயல்படுத்தப்படுத்தப்படும் என்று தெரிவித்தார்.

பூமியில் தண்ணீர் மட்டத்திற்கும் கீழ் ஆயிரம் அடிக்கும் மேலாகதான்  துழையிட்டு ஹைட்ரோகார்பன் எடுக்கப்பட உள்ளதாகவும் துழையிடுவதன் முலம் நிலத்தடி நீர் எந்தவித பாதிப்பும் ஏற்படாது என்று அரசு தெரிவித்துள்ளது.

இத்திட்டம் செயல்படுத்தப்பட்டால் இப்பகுதி மக்களின் வாழ்வாதாரம் மேம்படுவதுடன் செல்வ செழிப்புடன் இருக்கும் என்றும் கூறியுள்ளது.

ஆனால் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டால் நிலத்தடி நீர் பாதிக்கப்படுவதுடன் சுற்றுச்சுழல் பாதிப்பு ஏற்படும் என்றும் விவசாயம் அடியோடு பாதிக்கப்படும் என்பது இப்பகுதி மக்களின் கோரிக்கையாகும். இதற்குதான் இத்திட்டத்தை கைவிட கோரி போராட்டம் நடத்தப்படுவதாக இப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.

ஆனால் மத்திய அரசோ ஒப்பந்தம் கையெழுத்தானதை ஒரு போதும் மாற்ற முடியாது என்றும் இத்திட்டம் செயல்படுத்தியே தீருவோம் என்றும் எதிப்பு தெரிவிக்கும் மக்களை சமாதானம் செய்து நிறைவேற்றப்படும் என்பதில் உறுதியாக உள்ளது.   

click me!