“பத்திரபதிவு மீதான தடை நீக்கம்”  உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு....

 
Published : Mar 28, 2017, 12:56 PM ISTUpdated : Sep 19, 2018, 03:05 AM IST
“பத்திரபதிவு மீதான தடை நீக்கம்”  உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு....

சுருக்கம்

we can do land registration said chennai high court

“பத்திரபதிவு மீதான தடை நீக்கம்”  உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு....

விவசாய நிலங்களை வீட்டு மனைகளாக பிரித்து விற்பதற்கு தடை விதிக்கப்பட்டு இருந்தது. இதனால்   எந்த மனையை வாங்குவது எந்த மனையை விற்பது என்ற குழப்பம் நீடித்து வந்தது. இதன் காரணமாக  தமிழகத்தில் கடந்த 6 மாத காலமாக பத்திரபதிவு என்பதே அபூர்வமாக இருந்தது .

இது குறித்த வழக்கு விசாரணை சென்னை உயர்நீதின்மன்றதில் நடந்து வந்தது. பின்னர் விவசாய நிலங்களை முறைப்படுத்தி அதற்கான சரியான அறிக்கையை 6 வாரத்திற்குள் சமர்பிக்க உயர்நீதிமன்றம்  தமிழக அரசுக்கு உத்தரவிட்டு இருந்தது .

பின்னர், தமிழக அரசு தாக்கல் செய்த அறிக்கையையடுத்து தற்போது, தமிழக அரசின் கோரிக்கையை  ஏற்ற உயர்நீதிமன்றம்,பத்திர பதிவு மீதான தடையை  நீக்கி  இன்று உத்தரவு பிறப்பித்துள்ளது .

அதன்படி, 23 அக்டோபர் 2௦16 கு முன் வாங்கிய வீட்டுமனையை மறுபதிவு செய்யலாம் என்றும்,

அக்டோபர்23 ஆம் தேதிக்கு முன் வாங்கிய அங்கிகாரமில்லாத நிலத்தை, மனையாக பதிவு செய்ய  முடியாது எனவும்  தீர்ப்பு  வழங்கியது

வீட்டு மனைகள்

அங்கீகரிக்கப்பட்ட மற்றும் அங்கீகரிக்கப்படாத மனைகளை  பத்திரப்பதிவு செய்யலாம்  எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.  

மேலும் வீட்டு மனைகளை பதிவு செய்யும் போது சாலைக்கு 22 அடி இடம் ஒதுக்க வேண்டும் என்ற  விதியை மீறக் கூடாது என்றும் உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

அரசு தரப்பு விளக்கத்தை கேட்டறிந்த உயர்நீதிமன்றம், சில கட்டுப்பாடுகளுடன்  பத்திரபதிவு  மீதான  தடையை  தளர்த்தியது. மேலும் சாலை, கழிவு நீர், குழாய் வசதிக்கு  இடம் தராத மனை பற்றி  முறைப்படுத்த தமிழக அரசிடம் உயர்நீதிமன்றம் கேட்டுள்ளது. இது தொடர்பான மறு விசாரணையை  ஏப்ரல் 7 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது சென்னை உயர்நீதிமன்றம் .

 

PREV
click me!

Recommended Stories

அட! 2026 தேர்தலுக்கு இப்போதே ரெடி! நாம் தமிழர் கட்சியின் 100 வேட்பாளர் பட்டியலை வெளியிட்ட சீமான்!
விடாது கருப்பு..! துவண்டு கிடந்த ஓ.பி.எஸுக்கு துணிச்சல் கொடுத்த அமித் ஷா..! அதிமுவில் மீண்டும் அதிகார ஆடுபுலி ஆட்டம்..!