Armstrong Murder: ஆம்ஸ்ட்ராங் கொலையில் கைதானவர்கள் உண்மை குற்றவாளிகள் இல்லை.. திருமாவளவன் பகீர்.!

By vinoth kumar  |  First Published Jul 6, 2024, 1:41 PM IST

சரண் அடைந்தவர்களை கைது செய்து விட்டோம் என்ற அடிப்படையில் புலன் விசாரணை நிறுத்தி விடக்கூடாது.  உண்மையான குற்றவாளிகள் யாரோ அவர்களை கைது செய்ய வேண்டும் என்று பகுஜன் சமாஜ் கட்சி மற்றும் விடுதலை சிறுத்தை கட்சி சார்பில் தமிழக அரசுக்கு கோரிக்கை வைக்கிறோம். 


தமிழக அரசுக்கும், காவல்துறைக்கும் விடுக்கப்பட்ட சவால் தான் ஆம்ஸ்ட்ராங் படுகொலை என திருமாவளவன் கூறியுள்ளார். 

சென்னை பெரம்பூரில் பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவரும், வழக்கறிஞருமான ஆம்ஸ்ட்ராங் மர்ம கும்பலால் நேற்று இரவு சல்லி சல்லியாய் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவத்தை அடுத்து தலைநகர் சென்னையில் தொடர் பதற்றம் நிலவி வருவதால் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். அதே சமயம் ஆம்ஸ்ட்ராங் படுகொலையைக் கண்டித்து பெரம்பூரில் பகுஜன் சமாஜ் கட்சியினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில், ஆம்ஸ்ட்ராங் கொலை சம்பவம் தொடர்பாக ஆற்காடு சுரேஷின் தம்பி புன்னை பாலா உள்ளிட்ட 8 பேர் கைது செய்யப்பட்டு அவரிடம் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. 

Tap to resize

Latest Videos

இதையும் படிங்க: தலைநகரை கதி கலங்க வைத்த ஆற்காடு சுரேஷ்? இவரை கொலை செய்தது யார்? ஆம்ஸ்ட்ராங்கிற்கு என்ன தொடர்பு?

இந்நிலையில் சென்னை ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ள பகுஜன் சமாஜ் மாநிலத்தலைவர் ஆம்ஸ்ட்ராங் உடலுக்கு அஞ்சலி செலுத்திய பிறகு விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் பேட்டியளிக்கையில்: ஆம்ஸ்ட்ராங் உடல் அவரது கட்சி அலுவலக வளாகத்திற்குள் அவரது உடல் நல்லடக்கம் செய்ய அனுமதி அளிக்க வேண்டும் என பகுஜன் சமாஜ் கட்சி கோரிக்கை வைத்துள்ளது. இதனை அரசு அனுமதிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். ஆம்ஸ்ட்ராங் கொலையின் பின்னணியில் உள்ள குற்றவாளிகளை கண்டறிவதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இப்பொழுது சரணடைந்து இருப்பவர்கள் உண்மையான குற்றவாளிகள் இல்லை. அந்த கொலையில் சம்பந்தப்பட்டவர்கள் அவர்களை தூண்டி விட்டவர்கள் என அனைவரும் கைது செய்யப்பட வேண்டும்.

சரண் அடைந்தவர்களை கைது செய்து விட்டோம் என்ற அடிப்படையில் புலன் விசாரணை நிறுத்தி விடக்கூடாது.  உண்மையான குற்றவாளிகள் யாரோ அவர்களை கைது செய்ய வேண்டும் என்று பகுஜன் சமாஜ் கட்சி மற்றும் விடுதலை சிறுத்தை கட்சி சார்பில் தமிழக அரசுக்கு கோரிக்கை வைக்கிறோம். பொதுமக்களுக்காக தலையீடுபவர் அதற்காக அவருக்காக ஆங்காங்கே பகை எழுந்து இருக்கிறது.. அதற்குரிய பாதுகாப்பை காவல்துறை வழங்கி இருக்க வேண்டும், ஆனால் வழங்கவில்லை அது அதிர்ச்சி அழிக்கிறது.

இதையும் படிங்க:  நினைத்த படி.. அண்ணன் பிறந்த நாளில் ஆம்ஸ்ட்ராங்கை போட்டு தள்ளினோம்.. கைதானவர்கள் பரபரப்பு வாக்குமூலம்!

தமிழ்நாட்டில் தலித்துக்கள் தலித் இளைஞர்கள் குறிப்பாக தமிழக தென் மாவட்டங்களில் அடுத்தடுத்து கொலை செய்யப்படுவது நீடிக்கிறது. இன்று ஒரு அரசியல் தலைவர் அவரது இல்லத்தின் அருகிலேயே கொல்லப்பட்டிருக்கிறார் இது காவல்துறைக்கும் தமிழ்நாடு அரசுக்கும் விடுக்கப்பட்டுள்ள சவால். கூலிப்படைகளை சாத்தியவாதி கும்பலை கொலைகார கும்பலை அடையாளம் கண்டு அவர்களை கட்டுப்படுத்த தவறினால் அரசுக்கு மேலும் இதனால் களங்கம் ஏற்படும் என திருமாவளவன் கூறியுள்ளார். 

click me!