நகரமெங்கும் ஒலிக்கும் மரண ஓலம்! 9 பேர் பலியான நிலையில் மீண்டும் துப்பாக்கிச் சூடு... பெண் பலி... பலர் கவலைக்கிடம்!

Asianet News Tamil  
Published : May 22, 2018, 04:28 PM ISTUpdated : Sep 19, 2018, 02:24 AM IST
நகரமெங்கும் ஒலிக்கும் மரண ஓலம்! 9 பேர் பலியான நிலையில் மீண்டும் துப்பாக்கிச் சூடு... பெண் பலி... பலர் கவலைக்கிடம்!

சுருக்கம்

Thoothukudi was hit by a suicide bomber when 9 people were killed

தூத்துக்குடி கலவரத்தை ஒடுக்க போலீஸ் 3 முறை துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 3 பேர் பலியாகியுள்ளனர். துப்பாக்கிச் சூட்டில் 9 பேர் பலியான நிலையில் மீண்டும் துப்பாக்கிச் சூடு  நடத்தப்பட்டு அதிலும் ஒரு பெண் பலியான கொடுமை அரங்கேறியுள்ளது.

ஸ்டெர்லைட் ஆலையை மூட கோரி தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் தூத்துக்குடி மக்கள் இன்று 100வது நாள் போராட்டத்தை மேற்கொண்டனர். மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கி ஊர்வலமாக சென்ற நூற்றுக்கணக்கானோரை மடத்தூர் என்ற இடத்தில் போலீசார் தடுத்து நிறுத்தினர். 

இதையடுத்து காவல்துறையினர் மீது கற்களை வீசி போராட்டக்காரர்கள் தாக்குதல் நடத்தினர். போராட்டத்தில் ஏராளமான பொதுமக்கள் சூழ்ந்ததால் போலீசார் ஓட்டம் பிடித்தனர். 

இதனால் அங்கு வன்முறை வெடித்தது. இதையடுத்து போராட்டத்தை கட்டுக்குள் கொண்டுவர முயன்ற காவல்துறையினர், 3 முறை துப்பாக்கிச் சூடு நடத்தினர். முதல் முறை நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 2 பேர் உயிரிழந்தனர். 10 பேர் படுகாயமடைந்தனர். அவர்களில் கவலைக்கிடமான நிலையில் இருந்த 8 பேர் மற்றும் 17 வயதுடைய மாணவி ஒருவரும் கொடூரமாக  உயிரிழந்துள்ளார்.

மேலும், தூத்துக்குடி திரேஸ்புறத்தில் நடத்திய துப்பாக்கி சூட்டில் 1 பெண் பலியாக்கியுள்ளார். 20 க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர்.

மேலும், துப்பாக்கி சூட்டில் பலியானவர்வர்களின் பெயர், ஊர் விவரங்களை போலீசார் வெளியிட்டுள்ளனர்.

ஒட்டப்பிடாரம் ராமச்சந்திரபுரம் பொன் என்பரது மகன் புஇமு தலைவர் தமிழரசன் (28)

ஆசிரியர் காலனி பகுதியை சேர்ந்த சண்முகம் (40)

திரேஸ்புரம் மேட்டுப்பட்டி பகுதியை சேர்ந்த கோயில் பிச்சை மகன் கிளாஸ்டன் (40)

17 வயது மாணவி வெனிஸ்டா  மற்றும்  அந்தோணிராஜ்

தூத்துக்குடி சிலோன் காலனியைச் சேர்ந்த கந்தையா (55)

தூத்துக்குடி தாமோதர் நகரை சேர்ந்த மணிராஜ் (33)

ஆகியோர் போலீசாரின் துப்பாக்கி சூட்டால் கொல்லப்பட்டவர்களில் அடையாளம் காணப்பட்டவர்கள். இதுதவிர ஒரு பெண் உட்பட மொத்தம் 8 பேர் கொல்லப்பட்ட நிலையில் மீண்டும் ஒரு துப்பாக்கி சூடு நடத்தி இளம் பெண்ணை கொன்றுள்ளனர். மேலும் பலர் கவலைக்கிடமாக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

PREV
click me!

Recommended Stories

இன்னும் 10 ஆண்டுகளில் யாருக்கும் குழந்தை பாக்கியம் இல்லாமல் போய்விடும்.. நயினார் நாகேந்திரன்!
சொந்த கட்சி நிர்வாகியின் கார்கள் சல்லி சல்லியாக உடைப்பு! பாஜக முக்கிய நிர்வாகியின் பதவி பறிப்பு! வெளியான அதிர்ச்சி காரணம்?