ஷாக்கிங் நியூஸ்! தூத்துக்குடியில் தனியார் ஆலையில் வாயு கசிவு! 30 பேர் அடுத்தடுத்து மயங்கி விழுந்ததால் பரபரப்பு

By vinoth kumar  |  First Published Jul 20, 2024, 8:16 AM IST

தூத்துக்குடி மாவட்டம் புதூர் பாண்டியபுரத்தில் நிலா சீ புட்ஸ் தனியார் மீன் உள்ளிட்ட கடல் உணவுகளை பதப்படுத்தும் ஆலை செயல்பட்டு வருகிறது.


தூத்துக்குடியில் உள்ள தனியார் மீன் பதப்படுத்தும் ஆலையில் அம்மோனியா வாயு கசிவு ஏற்பட்டதில் பணியில் ஈடுபட்டிருந்த 30 பேர் அடுத்தடுத்து மயங்கி விழுந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. 

தூத்துக்குடி மாவட்டம் புதூர் பாண்டியபுரத்தில் நிலா சீ புட்ஸ் தனியார் மீன் உள்ளிட்ட கடல் உணவுகளை பதப்படுத்தும் ஆலை செயல்பட்டு வருகிறது. அங்குள்ள கடற்கரையில் இருந்து மீன்கள் கொள்முதல் செய்யப்பட்டு இந்த ஆலையில் பதப்படுத்தப்பட்டு வெளி மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. 

Tap to resize

Latest Videos

இதையும் படிங்க: Heavy Rain School Holiday: விடாமல் அடிச்சு ஊத்தும் கனமழை! எந்த மாவட்டத்திற்கு பள்ளிகளுக்கு விடுமுறை தெரியுமா?

இந்நிலையில் வழக்கம் போல பெண் ஊழியர்கள் இரவு 11 மணியளவில் மீன் பதப்படுத்தும் பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த அமோனியா சிலிண்டரில் வாயுக்கசிவு ஏற்பட்டுள்ளது. இதனால் ஆலையில் பணியாற்றிக்கொண்டிருந்த பெண்களுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டு அடுத்தடுத்து மயங்கி விழுந்தனர்.

இதையும் படிங்க: ஆம்ஸ்ட்ராங் நினைவேந்தல்! யார் கூப்பிட்டாலும் போக கூடாது! திருமாவளவன் நிர்வாகிகளுக்கு கண்டிஷன்..!

இந்த சம்பவம் தொடர்பாக தீயணைப்புத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்புத்துறையினர் பாதிக்கப்பட்டவர்களை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் தனியார் மருத்துவமனை அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர் 

click me!