
தியாகி ஆறுமுகம் ஐயா
நாட்டின் 69வது குடியரசு தினம் இன்று நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு தலைநகர் டெல்லி ராஜபாதை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தேசிய கொடியையேற்றினார்.
குடியரசு தினத்தை முன்னிட்டு நாட்டின் பெருமையை பறைசாற்றும் வகையிலும், பல்வேறு மாநிலங்களின் கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் வகையிலும் அலங்கார ஊர்திகள் அணிவகுப்பு நடைபெறுகிறது.
தமிழ்நாட்டில் பள்ளி கல்லூரி, அலுவலகம் என அனைத்து இடத்திலும் தேசிய கொடி ஏற்றி வீர வணக்கம் செலுத்தப்பட்டது.
இதே போன்று மேற்கு தாம்பரத்தில் உள்ள வள்ளுவர் குருகுலம் பள்ளியில், சுதந்திர போராட்ட ஆறுமுகம் ஐயா அவர்கள் கலந்துக் கொண்டு நிகழ்ச்சியை சிறப்பித்தார்.
உடன் லக்ஷ்மி நாராயணன். டாக்டர் .டி.கே.ஸ்ரீராம்,டி.கே ஹரி டி.கே ஸ்ரீநிவாசன் உள்ளிட்டோர் பங்கு பெற்றனர்
தியாகி ஆறுமுகம் ஐயா கலந்துக்கொண்ட இந்த நிகழ்வில் பள்ளி மாணவர்கள் உற்சாகமாக கலந்துக்கொண்டு நாட்டு பற்றை வெளிப்படுதினார்கள்.