கோடிகளை சுருட்டிய ‘கேடி கல்யாண சுருதி’ : தலைசுத்தும் தடாலடி பட்டியல்... 

 
Published : Jan 26, 2018, 06:35 PM ISTUpdated : Sep 19, 2018, 01:52 AM IST
கோடிகளை சுருட்டிய ‘கேடி கல்யாண சுருதி’ : தலைசுத்தும் தடாலடி பட்டியல்... 

சுருக்கம்

Chennai Actress Shruthi Cheats Youngsters On Facebook

மோசடி கல்யாண மன்னன்களை கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால் கோயமுத்தூரில் பிடிபட்டிருக்கும் சுருதி மிகப்பெரிய மோசடி கல்யாண இளவரசி. தன் அம்மா மற்றும் தம்பியுடன் சேர்ந்து பிளான் செய்து, மேட்ரிமோனியல் இணையதளம் மூலமாக பல வசதியுள்ள இளைஞர்களிடம் ‘மேரேஜ் பண்ணிக்கலாம்’ என்று நடித்து, வளைத்து பல லட்சங்களை சுருட்டிய மோக மந்தாகினி. சுருதியின் முழுப்பெயர் சுருதி (எ) மைதிலி வெங்கடேஸ்.

சொந்த ஊர் பாண்டிச்சேரி. பத்தாம் வகுப்புக்கு பின் பிழைக்க சென்றது கோயமுத்தூருக்கு. பனிரெண்டாம் வகுப்பு கூட முழுசாக முடிக்கவில்லை. ஆனால் மாப்பிள்ளை பசங்களிடம் பி.ஈ., எம்.ஈ. என்று விட்ட பீலாக்கள் கொஞ்சநஞ்சமல்ல. 

பிடிபடும் காலம் வரையில் பல இளைஞர்களிடம் அவர் சுருட்டியிருக்கும் தொகைகளும், அதன் மூலம் அவர் வாங்கிக் குவித்திருக்கும் நகைகளின் மதிப்பையும் பார்த்தால் கண்ணு கட்டுது சாமியோவ்!

அதன் லிஸ்டை பார்த்தால், சூப்பர் ஸ்டாருக்கு சுற்றியது போல் உங்களுக்கும் ‘அப்டியே தல சுத்தும்’!...

*    பாலமுருகன் என்பவரிடம் ஏமாற்றி சுருட்டிய தொகை நாற்பத்து ஓரு லட்சத்து பதினைந்தாயிரம் ரூபாய். 

*    இதில் பதினைந்தரை லட்சத்தில் 62 பவுன் தங்கம் மற்றும் டைமண்ட் ரூபி கற்கள் பதித்த நகைகள் வாங்கியிருக்கிறார்கள்.

*    மியூசுவல் ஃபண்டில் ஐந்தரை லட்சத்தை சுருதி பெயரில் முதலீடு செய்திருக்கிறார்கள்

*    ஒரு லட்சத்து முப்பத்து ரெண்டாயிரத்தை விமான டிக்கெட், ஹோட்டல் செலவு, செல்போன் ரீசார்ஜூக்காக பயன்படுத்தியுள்ளார்கள்.

*    சுருதியின் பெயரில் வெளிநாடு வங்கிக் கணக்கில் சுமார் பதினெட்டரை லட்சம் முதலீடு

*    பாலமுருகனை போல் பலரை ஏமாற்றிய வகையில் மூணு லட்சத்து எண்பதாயிரம் மதிப்பில் தங்கநகைகள் வாங்கியிருக்காங்க. 

*    வீட்டை ரெய்டு செய்தபோது பத்து லட்சம் மதிப்பில் தங்கம் மற்றும் வைர நகைகள் பிடிபட்டது. 

*    சுமார் ஒரு லட்சத்து தொண்ணூறாயிரம் மதிப்பிலான 9 பவுன் நகைகள் தனியார் வங்கியில் அடமானத்தில் வைக்கப்பட்டு அந்த பணத்தில் செம்ம சொகுசு வாழ்க்கை.

*    பலரை ஏமாற்றி சுருட்டிய பணத்தில் 4 ஐபோன், 5 ஆண்ட்ராய்டு போன், ஆப்பிள் ஐபேடு, ஆப்பிள் லேப்டாப்பை வாங்கியிருக்கிறார்கள். 

*    58 பவுன் நகைகள் பல வங்கிகளில் அடமானம் வைத்து கிடைத்த பணத்தில் சொகுசு பயணங்கள்.

*    2012ல் நாமக்கல்லை சேர்ந்த சந்தோஷ்குமாரிடம் 43,50, 000 லபக்

*    ராமச்சந்திரனிடம் எட்டரை லட்சம் லபக்

*    கணேஷிடம் 4,84,665 லபக்

*    அருண் குமாரிடம் எட்டு லட்சத்து நாற்பத்து மூவாயிரம் சுருட்டல்

*    விஜய்யிடம் 2,99,000 லபக்

*    இசக்கிமுத்துவிடம் 3 லட்சம் ஆட்டைய போட்டாச்சு

*    அமுதன் வெங்கடேசனிடம் நாலு லட்சம் லபக்

*    இது போக பல வங்கிகளில் சுருதியின் பெயரிலும் அவரது அம்மா சித்ராவின் பெயரிலும் 47 லட்சம் அளவில் சீட்டிங் பணம் டெபாசிட் ஆகியுள்ளதாம். 
.... என்ன தலை மட்டுமா சுத்துது?!

PREV
click me!

Recommended Stories

நாளையே திமுக என்னை தூக்கிப்போட்டாலும் கவலையில்லை..! மதுரையில் 'கெத்து' காட்டிய திருமாவளவன்!
2026 புத்தாண்டு கொண்டாட்டம்.. தமிழக அரசுக்கு உயர் நீதிமன்றம் போட்ட அதிரடி உத்தரவு!