திருச்செந்தூர் திருக்கோயில் திருப்பணிகள் 3 ஆண்டுகளுக்குள் முடிக்கப்பட்டு குடமுழுக்கு நடத்தப்படும் என்று இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.
திருச்செந்தூர் திருக்கோயில் திருப்பணிகள் 3 ஆண்டுகளுக்குள் முடிக்கப்பட்டு குடமுழுக்கு நடத்தப்படும் என்று இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். இதுக்குறித்து செய்தியாளர்களிடம் பேசிய, திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலின் நிலை குறித்து இந்த தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி அவ்வபோது கேட்டறிந்து வருகிறார். இந்த திருப்பணிகள் நேர்த்தியாகவும், விரைவாகவும் நடப்பதற்கு உறுதுணையாய் இருக்கின்ற அனைவருக்கும் துறையின் சார்பில் நன்றி தெரிவித்து கொள்கிறோம். இந்தாண்டு மானியக்கோரிக்கையின் போது திருச்செந்தூர் கோயில் வளாகத்தில் ஒரு நந்தவனம் அமைக்க ரூ.50 லட்சம், மாற்றுத்திறனாளிகள் கடலில் தீர்த்தமாடும் வகையில் நடைபாதை அமைக்க ரூ.50 லட்சம் என 4 பணிகளுக்கும், இத்திருக்கோயிலின் 3 உபகோயில்கள் திருப்பணிகளுக்கும் சேர்த்து ஒட்டுமொத்தமாக 7 பணிகளுக்கு ரூ.6 கோடி அறிவிக்கப்பட்டிருக்கிறது.
இதையும் படிங்க: சரியாக படிக்காத மாணவர்களுக்கு கட்டாய மாற்று சான்றிதழ் வழங்கினால் கடும் நடவடிக்கை
undefined
12 ஆண்டுகள் திருப்பணிகள் மேற்கொள்ளப்படாத கோயில்களில் திருப்பணிகள் நடத்திட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதுமட்டுமல்லாமல் 1000 ஆண்டுகளுக்கு மேற்பட்ட 714 திருக்கோயில்கள் பராமரிப்பதற்கு கடந்த ஆண்டு வழங்கப்பட்ட அரசு மானியம் ரூ.100 கோடியில் 116 பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த ஆண்டும் ரூ.100 கோடி அரசு மானியமாக வழங்கப்பட்டு 60க்கும் மேற்பட்ட திருக்கோயில்கள் பணிகளுக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளன.
இதையும் படிங்க: தேனியில் விபத்து ஏற்படுத்திவிட்டு இழப்பீடு வழங்காத 3 அரசு பேருந்துகள் ஜப்தி
திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் 3 கட்டமாக பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது. தற்போது 1 லட்சம் சதுர அடியில் பணிகள் நடைபெறுகிறது. அதில் நிலத்தடி நீர்தேக்க தொட்டி, நிர்வாக அலுவலகம், கழிவுநீர் கால்வாய்கள் கட்டப்பட்டு வருகிறது. இன்னும் 3 ஆண்டுகளுக்குள் முழுமையாக திருப்பணிகள் முடிக்கப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெறும். இத்திருக்கோயிலை பொறுத்தவரை அனைத்து துறைகளும் ஒருங்கிணைத்து பணிகளை மேற்கொண்டு வருகின்றன என்று தெரிவித்துள்ளார்.