
பா.ரஞ்சித் தமிழ்திரையுலகில் யாரும் எட்டாத உயரத்தை வெகு சீக்கிரத்தில் அடைந்தவர். திரைத்துரைக்கு வந்த சில ஆண்டுகளிலேயே சூப்பர் ஸ்டாரை வைத்து இயக்கும் அளவிற்கு முன்னேறி இருக்கும் இவர், தற்போது ரஜினியை வைத்து இரண்டாவதாக இயக்கி இருக்கும் திரைப்படம் காலா. இந்த திரைப்படம் வரும் ஜீன் 7 அன்று திரைக்கு வர இருக்கிறது.
பா.ரஞ்சித் ஒரு இயக்குனராக இருந்தாலும், சமுதாய பிரச்சனைகளுக்கு எதிராக தனது கருத்துக்களை, அவ்வப்போது பதிவு செய்தும் வருகிறார். தற்போது அவர் டிவிட்டரில் ஒரு சாதிய பிரச்சனை குறித்து தனது கருத்தை பதிவு செய்திருக்கிறார்.
சிவகங்கை மாவட்டத்தில் ஆதிக்க சாதியினர் ஒடுக்கப்பட்ட மக்கள் மீது நடத்திய தாக்குதலில் இரண்டு பேர் கொல்லப்பட்டிருக்கின்றனர் மேலும் 8 பேர் படுகாயமடைந்து சிகிச்சை பெற்றுவருகின்றனர். இந்த பதிவை ஒரு எழுத்தாளர் தனது டிவிட்டர் பதிவில் வெளியிட்டிருக்கிறார்.
அந்த பதிவை படித்த ரஞ்சித் ஆக்ரோஷமாகஒரு பதிவை வெளியிட்டிருக்கிறார் அதில் ”தமிழர் என்றோர் இனமுண்டு! தனியே அவர்களுக்கோர் குணம் உண்டு!!#சாதிவெறி” என குறிப்பிட்டிருக்கிறார். அந்த பதிவில் அவர் ஒட்டு மொத்த தமிழ் மக்களையும் சாதி வெறியர்கள் எனக் குறிப்பிட்டிருப்பது, தற்போது சர்ச்சையை கிளப்பி இருக்கிறது.