பள்ளி மாணவர்களுக்கு வீட்டுப்பாடங்கள் கொடுக்க தடை! ஹைகோர்ட் அதிரடி உத்தரவு

First Published May 29, 2018, 12:35 PM IST
Highlights
School students are prohibited to write homework - Chennai High Court


ஒன்று மற்றும் இரண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு வீட்டுப்பாடம் எழுதச் சொல்ல சென்னை உயர்நீதிமன்றம் தடை விதிக்கப்பட்டுள்ளது. தடையை மீறும்
பள்ளிகளின் அங்கீகாரத்தை ரத்து செய்யவும் தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஜூன் 1 ஆம் தேதியில் பள்ளிகள் துவங்க உள்ள நிலையில், உயர்நீதிமன்றத்தின் உத்தரவு அமல்படுத்தப்படும் என்றும், மீறும் பள்ளிகளின் அங்கீகாரம் ரத்து
செய்யப்படும் என்றும் உயர்நீதிமன்றம் கூறியுள்ளது.

அனைத்து கல்வி வாரியங்களும் இதனை பின்பற்ற வேண்டும் என்றும் 4 வாரங்கள் கழித்த இந்த உத்தரவு அமல்படுத்தப்பட்டது குறித்த அறிக்கை தாக்கல்
செய்யப்பட வேண்டும் என்றும் மாணவர்களுக்கு மன அழுத்தத்தை தராத கல்வியை வழங்க வேண்டும் என்றும் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மெட்ரிகுலேஷன் பள்ளிகள், சிபிஎஸ்இ பள்ளிகளுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் என்.சி.இ.ஆர்.டி. பாடபுத்தகங்கள் மட்டுமே நடத்த
வேண்டும் என்றும் உயர்நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

புருஷோத்தமன் என்பவர் தொடர்ந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. இது குறித்து கல்வியாளர்கள் கருத்து
தெரிவிக்கையில், கல்வி என்பது மாணவர்களுக்கு சுமையாக இருக்கக் கூடாது என்றும், சுகமாக இருக்க வேண்டும் என்றும் கருத்து தெரிவித்துள்ளனர்.
உயர்நீதிமன்றத்தின் உத்தரவை தாங்கள் வரவேற்பதாகவும் அவர்கள் கூறுகின்றனர்.

click me!