மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் மங்கைமடம் டாஸ்மாக் கடையை அகற்றுங்க.. அதிமுக கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றம்

By vinoth kumarFirst Published Sep 30, 2022, 9:51 AM IST
Highlights

திருவெண்காடு அருகே மங்கைமடத்தில் உள்ள டாஸ்மாக் கடையை அகற்ற வேண்டும் என அதிமுக இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

திருவெண்காடு அருகே மங்கைமடத்தில் உள்ள டாஸ்மாக் கடையை அகற்ற வேண்டும் என அதிமுக இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

மயிலாடுதுறை மாவட்டம் திருவெண்காட்டில் சீர்காழி கிழக்கு ஒன்றிய அதிமுக இளைஞர் மற்றும் இளம் பெண்கள் பாசறை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு ஒன்றிய பாசறை தலைவர் அனிதா தலைமை தாங்கினார். இதில், கிழக்கு ஒன்றிய செயலாளர் சந்திரசேகரன், அவைத் தலைவர் மனோகரன், பாசறை மாவட்ட தலைவர் மாமல்லன், மயிலாடுதுறை மாவட்ட பாசறை செயலாளர் பாபு ஆகியோர் உள்ளிட்டோர் பங்கேற்றனர். 

இந்த கூட்டத்தில் மங்கை மடம் கடைத்தெருவில் உள்ள டாஸ்மாக் கடையால் பொதுமக்கள், வியாபாரிகள்  உள்பட அனைத்து தரப்பினரும் பாதிக்கப்படுகின்றனர். எனவே அந்த கடையை அகற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.  திருவெண்காடு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் இரவு நேரத்தில் டாக்டர்கள் பணியில் இல்லாததால் நோயாளிகள் மிகவும் அவதிப்படுகின்றனர். 

எனவே உடனடியாக இரவு நேரத்தில் டாக்டர்களை பணியில் அமர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும். திருவாலி ஏரியில் படர்ந்துள்ள ஆகாயத்தாமரை செடிகளை அகற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன. 

click me!