திருப்பதி குடை திருமலைக்கு புறப்பட்டது... திரளான பக்தர்கள் தரிசனம்!

By vinoth kumarFirst Published Sep 11, 2018, 9:41 AM IST
Highlights

திருமலை ‌திரு‌ப்ப‌தி‌யி‌ல் ‌உ‌ள்ள ஸ்ரீவெங்கடேச பெருமாலுக்கு சமர்ப்‌பி‌க்க, சென்னையில் இருந்து திருப்பதி திருக்குடை ஊர்வலம் இன்று காலை துவங்கியது.

திருமலை ‌திரு‌ப்ப‌தி‌யி‌ல் ‌உ‌ள்ள ஸ்ரீவெங்கடேச பெருமாலுக்கு சமர்ப்‌பி‌க்க, சென்னையில் இருந்து திருப்பதி திருக்குடை ஊர்வலம் இன்று காலை துவங்கியது. சென்னை பாரிமுனை தேவராஜ் முதலி தெருவில் உள்ள சென்னகேசவ பெருமாள் கோயிலில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு பெருமாள் அருளாசியுடன் திருப்பதி குடை ஊர்வலம் புறப்பட்டது. 

திருப்பதி குடை ஊர்வலம் வழக்கமாக செல்லும் பாதையான என்.எஸ்.சி. போஸ் சாலை கோவிந்தப்ப நாயகன் தெரு சந்திப்பு (சென்ன கேசவ பெருமாள் கோயில்) பைராகிமடம் வால்டாக்ஸ் சாலை வழியாக வந்து சுமார் 4 மணியளவில் குடைகள் யானைக்கவுனி தாண்டுகிறது. பிறகு நடராஜா திரையரங்கம், செயின்ட் தாமஸ் சாலை, சூளை நெடுஞ்சாலை, அவதான பாப்பையா சாலை, பெரம்பூர் பேரக்ஸ் சாலை, ஸ்டேரன்ஸ் சாலை, கொன்னூர் நெடுஞ்சாலை, தாக்கர் சத்திரம் வழியாக காசி விஸ்வநாதர் கோயிலை சென்றடையும்.

இரவு கோ‌யி‌லி‌ல் த‌ங்‌கி‌வி‌ட்டு அ‌திகாலை‌யி‌ல் புற‌ப்படு‌ம் குடை, ஐசிஎப், பெரம்பூர், வில்லிவாக்கம், பாடி, அம்பத்தூர் எஸ்டேட் செல்லும் திருக்குடைகள், ஆவடி, பட்டாபிராம், மணவாளன் நகர், திருவள்ளூர் வீரராகவப் பெருமாள் கோயில் வழியாக திருப்பதியை சென்றடைகிறது.

திரு‌ப்ப‌தி ‌திரு‌க்குடை ஊ‌ர்வல‌த்‌தி‌ல் உ‌ண்டிய‌ல் வசூ‌ல் ‌நிறு‌த்த‌ப்ப‌ட்டு‌ள்ளது. பொதும‌க்களு‌க்கு அழை‌ப்பு ‌விடு‌ம் ‌வித‌த்‌தி‌ல் ‌தி‌ரு‌ப்ப‌தி குடை வரு‌ம் ‌வீ‌திக‌ளி‌ல் அறி‌வி‌ப்பு பலகைக‌ள் வை‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளன. ‌திரு‌ப்ப‌தி ‌திரு‌க்குடை ஊ‌ர்வல‌த்‌தி‌‌ன் போது மே‌ற்கூ‌றிய சாலைக‌ளி‌ல் போக்குவரத்து மா‌ற்ற‌ம் செ‌ய்ய‌ப்படு‌ம். த‌ற்கா‌லிகமாக ‌சில சாலைக‌ளி‌ல் போக்குவர‌த்து ‌நிறு‌த்த‌ப்படு‌ம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

click me!