அடுத்த 3 நாட்களுக்கு கொட்டப்போகு தாம் மழை... வானிலை மையம் தகவல்!

Published : Sep 10, 2018, 03:07 PM ISTUpdated : Sep 19, 2018, 09:21 AM IST
அடுத்த 3 நாட்களுக்கு கொட்டப்போகு தாம் மழை... வானிலை மையம் தகவல்!

சுருக்கம்

அடுத்த 3 தினங்களுக்கு தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் இலேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் இயக்குநர் தெரிவித்துள்ளார்.

அடுத்த 3 தினங்களுக்கு தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் இலேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் இயக்குநர் தெரிவித்துள்ளார். இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், வளிமண்டலத்தில் நிலவும் குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை காரணமாக அடுத்த 3 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக கூறினார்.

வேலூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, காஞ்சிபுரம், சேலம் உள்ளிட்ட வட தமிழக மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என்றார்.
சென்னையில் ஓரிரு முறை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாகவும் அவர் கூறினார். 

கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக நெடுங்கால் 9 செ.மீ., நத்தம் 5 செ.மீ., பாரூர் (கிருஷ்ணகிரி) 4 செ.மீ. மழை பதிவானதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

PREV
click me!

Recommended Stories

பொங்கல் பண்டிகை அதுவுமா! மெட்ரோ ரயில் சேவையில் அதிரடி மாற்றம்! இதோ முழு விவரம்!
சென்னையை சுற்றி பார்க்க சூப்பர் வாய்ப்பு.. 50 ரூபாய் இருந்தால் போதும்.. அமைச்சர் சொன்ன குட்நியூஸ்!