சிறுமி மர்மச்சாவு... கடற்கரையோரம் சடலம் மீட்பு... கொலையா? விசாரணை!

By vinoth kumarFirst Published Sep 8, 2018, 12:28 PM IST
Highlights

சென்னை காசிமெடு பகுதியில், 9 வயது சிறுமி மர்மமான முறையில் இறந்தாள். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 

சென்னை காசிமெடு பகுதியில், 9 வயது சிறுமி மர்மமான முறையில் இறந்தாள். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. சென்னை காசிமேடு சிங்காரவேலன் நகரை சேர்ந்தவர் பிரகாஷ். இவரது மனைவி மாலினி. இவர்களது மகள் ஜெசிகா (10). ராயபுரத்தில் உள்ள தனியார் பள்ளியில் 5-ம் வகுப்பு படித்து வந்தாள். நேற்று முன்தினம் சிங்காரவேலன் நகரில் உள்ள அம்மன் கோயிலில் திருவிழா நடந்தது. அதில் பிரகாஷ், குடும்பத்துடன் கலந்து கொண்டார். அப்போது அலகு குத்தி பக்தர்கள் ஊர்வலமாக சென்றனர். அந்த ஊர்வலத்தில் செல்லும்போது, சிறுமி ஜெசிகா திடீரென மாயமானார். அவரை அப்பகுதி முழுவதும் தேடியும் கிடைக்கவில்லை. 

இதையடுத்து ராயபுரம் போலீசில், மகள் மாயமானது குறித்து பிரகாஷ் புகார் அளித்தார். ஆனால், அங்குள்ள போலீசார், ஊர்வலம் நடந்த பகுதி தங்களது எல்லை இல்லை. காசிமேடு மீன்பிடி துறைமுகம் போலீசாரிடம் புகார் அளிக்கும்படி கூறினர். அதன்படி காசிமேடு மீன்பிடி துறைமுகம் போலீசாரிடம் புகார் அளித்தபோது, ராயபுரம் போலீசில் புகார் அளிக்கும்படி கூறினர். இதனால், ஆத்திரமடைந்த பிரகாஷ் மற்றும் உறவினர்கள் போலீசாரை கண்டித்து சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது. 

அந்த நேரத்தில், காசிமேடு மீன் ஏலம்விடப்படும் பகுதியின் கரையோரத்தில் சிறுமியின் சடலம் கிடப்பதாக அவர்களுக்கு தெரியவந்தது. இதையடுத்து அங்கு சென்று பார்த்தபோது, சிறுமி ஜெசிகா சடலமாக கிடப்பது தெரிந்தது. இதையடுத்து காசிமேடு மீன்பிடி துறைமுகம் போலீசார் சடலத்தை கைப்பற்றி, ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். மேலும் போலீசார் வாக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர். 

இதற்கிடையில், போலீசார் முறையாக புகாரை பெற்று மாயமான சிறுமியை தேடி இருந்தால், இதுபோன்ற சம்பவம் நடந்து இருக்காது. புகார் கொடுக்க வந்தவர்களை, எல்லையை காரணம் காட்டி அலைக்கழித்ததால், சிறுமி இறந்தாள். சிறுமியின் இறப்பில் சந்தேகம் உள்ளது என கூறி மீண்டும் ஆர்ப்பாட்டம் நடத்தினர். தகவலறிந்து காவல்துறை உயர் அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு சென்று மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் சமரசம் பேசி, சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய நடகடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்தனர். இதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர்.

click me!