
வழக்கமாக தென் மேற்கு பருவமழை கேரள மாநிலத்தில் ஜூன் 1-ந்தேதி தொடங்கும். ஆனால், கடந்த 2011ம் ஆண்டுக்குப் பின் பருவ மழை பொய்த்து, சுமாரான மழையாகவே இருந்தது. இதனால், தென் மேற்கு பருவ மழையை நம்பி இருந்த விவசாயம் கடுமையாக பாதிக்கப்பட்டது.
ஏறக்குறைய 6 ஆண்டுகளுக்கு பின், இந்த ஆண்டு 2 நாட்கள் முன்கூட்டியே பருவமழை பெய்து அனைத்து தரப்பு மக்களையும் குளிர்வித்து வருகிறது.
தமிழகத்தை பொறுத்தவரை இன்னும் இரண்டு நாட்களில் வெயில் படிப்படியாக குறைந்து தமிழகத்தில் தென்மேற்கு பருவ மழை தொடங்கும் என ஏற்கனவே தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் இன்று வானிலை ஆய்வுமைய இயக்குனர் பாலச்சந்திரன் கூறுகையில், தமிழகத்தின் உள்மாவட்டங்களில் வெப்ப சலனத்தால் மழை பெய்யும் எனவும் ஆனால் சென்னையை பொறுத்தவரை மழை பெய்யாது எனவும் தெரிவித்துள்ளார்.
மேலும் சென்னையை பொறுத்தவரை அதிகபட்சம் வெப்பநிலை 40 டிகிரி செல்சியஸ் இருக்கும் எனவும், குறைந்த பட்சமாக 30 டிகிரி செல்சியஸ் இருக்கும் எனவும் குறிபிட்டுள்ளார்.
கடந்த 24 மணி நேரத்தில் பேச்சிப்பாறை மதுரை - 3 செ.மீ ,கோயம்புத்தூர் 2 செ.மீ மழை பதிவாகி உள்ளது எனவும் பாலச்சந்திரன் தெரிவித்தார்.