
ஏப்ரல் மாதம் முதல் வாரத்தில் இருந்து 3 சுழற்சிகள் உருவாகிறது. இதனால், 3 ம் தேதி முதல் மே மாதம் 18 ம் தேதி வரை வாரத்தில் 3 நாட்களுக்கு அட்டகாச மழை பெய்யும் என வானிலை ஆராய்ச்சி ஆர்வலர் ந.செல்குமார் கூறியுள்ளார்.
இம்மாதம் 28, 29 ஆகிய தேதிகளில் முத்துப்பேட்டை முதல் தூத்துக்குடி வரை கடலோர பகுதிகளில் பலத்த மழை பெய்யும். இதை தொடர்ந்து ஏப்ரல் 3 முதல் 6ம் தேதி வரை டெல்டா, தென் தமிழகம் உள்பட சில பகுதியில் காற்றுடன் கூடிய மழை ஏற்படும்.
காற்றின் சுழற்சியினால், ஏப்ரல் 13 முதல் மே 18ம் தேதி வரை வாரத்தில் 3 நாட்களுக்கு விடாமல் மழை பெய்யும் என கூறியுள்ளார்.
ஏற்கனவே மழை பொய்த்து போய், வரும் கோடை காலத்தில் மக்கள் தண்ணீருக்காக அலையும் நிலை உள்ளது. விவசாய நிலங்கள் பாலைவனம் போல் இப்போதே காட்சியளிக்க தொடங்கிவிட்டது.
இந்த நேரத்தில் மழை குறித்து தகவல் வெளியிட்டுள்ளதால் பொதுமக்களும், விவசாயிகளும் மழையை நோக்கி காத்திருக்கின்றனர்.