மதுரை விமானநிலையத்தில் திடீரென வெடித்த துப்பாக்கி..! அலறி அடித்து ஓடிய பயணிகள்

By Ajmal KhanFirst Published Jul 12, 2022, 4:07 PM IST
Highlights

மதுரை விமான நிலையத்தில் திடீரென துப்பாக்கி வெடித்த சத்தம் கேட்டதால் பயணிகள் அலறி அடித்து ஓடியதால் பரபரப்பு ஏற்பட்டது.
 

மதுரை விமான நிலையத்தில் துப்பாகி வெடித்தது

மதுரை விமானநிலையத்திற்கு பல்வேறு நாடுகளில் இருந்து ஏராளமான பயணிகள் வருவார்கள், இவர்களை சோதனை செய்ய  மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். துபாய், சவுதி,இலங்கை உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் இருந்து கடத்தி வரும் பொருட்களை பறிமுதல் செய்ய மத்திய தொழில் பாதுகாப்பு படை முக்கிய பங்கு வகிக்கும், மேலும் விமான நிலையத்தில் தீவிரவாதிகள் புதுந்துவிடாமல் தடுக்கும் பணியிலும் இரவு பகலாக ஈடுபட்டு வருகின்றனர்.  அந்த வகையில், நேற்று மதுரை மாவட்டம் பெருங்குடி பகுதியில் உள்ள விமான நிலையத்தில் பாதுகாப்பு பணியில் மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் ஈடுபட்டனர்

beluga airbus: விமானத்தையே தூக்கிச் செல்லும் தமிங்கல பெலுகா ஏர்பஸ் விமானம்: சென்னை விமானநிலையம் வந்தது ஏன்?

சிஎஸ்ஐஎப் வீரர் சஸ்பெண்ட்

 நேற்றிரவு பாதுகாப்பு பணியில் இருந்த மத்திய தொழில் பாதுகாப்பு படை ஆய்வாளரான துருவ குமார் ராய் பணியை முடித்து தான் வைத்திருந்த 9 மில்லிமீட்டர் குண்டு கொண்ட துப்பாக்கியை விமான நிலையம் அருகேயுள்ள உள்ள மத்திய தொழில்பாதுகாப்பு படை பிரிவின் ஆயுதக் கட்டிடத்தில் ஒப்படைத்தார். அப்போது எதிர்பாரதவிதமாக துப்பாக்கி வெடித்துள்ளது. இதனால் மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.  இந்த துப்பாக்கி சூட்டில் யாருக்கும் காயம் ஏதும் ஏய்படாத நிலையில் திடிரென துப்பாக்கி வெடித்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதனையடுத்து இது குறித்து விசாரணை நடத்தப்பட்ட நிலையில் துப்பாக்கியை எதிர்பாரதவிதமாக வெடிக்க வைத்ததாகவும், பணியில் அலட்சியமாக இருந்த காரணத்தால்  மத்திய தொழில் பாதுகாப்பு படை ஆய்வாளர் துருவ குமார் ராயை மத்திய தொழில் பாதுகாப்பு படை ஐஜி பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார்.

இதையும் படியுங்கள்

கொடநாடு கொலை வழக்கு..! முன்னாள் எம்,எல்.ஏவிடம் தனிப்படை போலீசார் மீண்டும் விசாரணை

 

click me!