கொடநாடு கொலை வழக்கு..! முன்னாள் எம்,எல்.ஏவிடம் தனிப்படை போலீசார் மீண்டும் விசாரணை

Published : Jul 12, 2022, 03:23 PM IST
கொடநாடு கொலை வழக்கு..! முன்னாள் எம்,எல்.ஏவிடம் தனிப்படை போலீசார் மீண்டும் விசாரணை

சுருக்கம்

கொடநாடு கொலை,கொள்ளை வழக்கு தொடர்பாக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஆறு குட்டியிடம் கோவையில்  தனிப்படை போலீசார் மீண்டும் விசாரணை மேற்கொண்டனர்.

கொடநாடு கொலை வழக்கு

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கு சொந்தமான கொடநாடு எஸ்டேட்டில் கடந்த 2017 ஆம் ஆண்டு கொள்ளையடிப்பதற்காக சென்ற மர்ம கும்பல் அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த ராம்பகதூர் என்பவரை கொலை செய்த்து. இதனையடுத்து இந்த வழக்கில் தொடர்புடையவர்கள் அடுத்தடுத்து மர்மமான முறையில் மரணம் அடைந்தனர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இந்த வழக்கு தொடர்பாக சயான் உள்ளிட்ட 10 பேரை கைது செய்து போலீசார் விசரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் கொடநாடு கொலை கொள்ளை வழக்கு தொடர்பாக மேற்கு மண்டல காவல்துறை தலைவர் சுதாகர் தலைமையில்  தனிப்படை போலீசார் விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில் இதுவரை 250க்கும் மேற்பட்டோரிடம்  விசாரணை நடத்தப்பட்டுள்ளது. கடந்த வாரம் இந்த வழக்கு தொடர்பாக பிரபல மணல் ஒப்பந்ததாரர் ஆறுமுகசாமி மற்றும் அவரது மகன் செந்தில்குமார் ஆகியோரிடம் விசாரணை நடத்தப்பட்ட நிலையில் நேற்று பாண்டிச்சேரியை சேர்ந்த ரிசார்ட் உரிமையாளரான நவீன் பாலாஜி இடம் விசாரணை நடத்தப்பட்டது. 

ஜெ.வின் மகளே பொறுத்தது போதும்..! அரசியலுக்கு வாங்க...பிரபாவை சந்தித்து கோரிக்கை வைத்தவர்கள் யார் தெரியுமா?

முன்னாள் எம்.ஏல்.ஏ விடம் விசாரணை

இதனிடையே கோவை கவுண்டம்பாளையம் சட்டமன்ற தொகுதியின் முன்னாள் உறுப்பினர் ஆறுகுட்டியிடம் கடந்த மாதம் தனிப்படை போலீசார் விசாரணை மேற்கொண்ட சூழலில்  இன்று மீண்டும் அவரிடம் கோவை காவலர் பயிற்சி பள்ளி வளாகத்தில் வைத்து விசாரணை நடத்தப்பட்டது. கடந்த மாதம் நடத்தப்பட்ட விசாரணையின் போது சில விவரங்கள் கேட்காமல் விட்டதாகவும் அது தொடர்பான கேள்விகள் இன்றைய தினம் கேட்கப்பட உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.  இருப்பினும் கடந்த சில தினங்களாக நடத்தப்பட்ட விசாரணையில் கிடைக்கப்பெற்ற தகவல்களின் அடிப்படையிலேயே ஆறுகுட்டியிடம் மறு விசாரணை நடத்தப்படுவதாகவும் கூறப்படுகிறது. இரண்டு முறை விசாரிக்கப்பட்ட நிலையில் மீண்டும் ஆறுகுட்டியிடம் நடத்தப்பட்ட விசாரணை வழக்கில் முக்கியத்துவம் வாய்ந்ததாகவும் கருதப்படுகிறது. 

கயல் சீரியலில் வரும் கயல் தான் சின்னம்மா.. மேடையில் கண்ணீர் விட்ட திவாகரன் - சசிகலா !

கனகராஜ் தொடர்பாக கேள்வி

விசாரணைக்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய ஆறுகுட்டி, சுமார் இரண்டு மணி நேரம் நடத்தப்பட்ட விசாரணையில் கொலை வழக்கின் முக்கிய குற்றவாளியான கனகராஜ் குறித்து சில கேள்விகள் கேட்கப்பட்டதாகவும் அதற்கு உரிய பதில் அளித்ததாகவும் ஆறுகுட்டி தெரிவித்துள்ளார். மேலும்  எப்போது வேண்டுமானாலும் விசாரணைக்கு அழைக்கலாம் என்றும் எப்போது அழைத்தாலும் விசாரணைக்கு தான் தயாராக இருப்பதாகவும் அதிகாரிகளிடம் கூறியுள்ளேன் என தெரிவித்தார். 

இதையும் படியுங்கள்
திமுகவில் இணைகிறாரா ஓபிஎஸ்..? அமைச்சர் பதிலால் அதிர்ச்சியில் அதிமுக

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

இலங்கைக்கு உதவிய தமிழகம்: புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு 950 டன் நிவாரணப் பொருட்கள் அனுப்பி வைப்பு
இப்படியொரு ப்ளானா..? டபுள் ஸ்டாண்ட் விஜயின்..! என்.டி.ஏ கூட்டணிக்கு கேட் போடும் ராகுல்..! திமுகவுக்கு திருகுவலி..!