கேரளாவில் பரவும் தக்காளி காய்ச்சல்... தமிழக எல்லைகளில் கண்காணிப்பை தீவிரப்படுத்தியது தமிழக அரசு!!

கேரளாவில் தக்காளி காய்ச்சல் வேகமாக பரவி வரும் நிலையில் தமிழக எல்லைகளில் கண்காணிப்பு பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். 


கேரளாவில் தக்காளி காய்ச்சல் வேகமாக பரவி வரும் நிலையில் தமிழக எல்லைகளில் கண்காணிப்பு பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை அடுத்த விராலூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது. இந்த முகாமை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் துவக்கி வைத்து ஆய்வு செய்தார்.

இதையும் படிங்க: தமிழகத்தில் குறையும் கொரோனா… சென்னையில் 1000க்கும் கீழ் குறைந்தது தொற்று!!

Latest Videos

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், புதுக்கோட்டை மாவட்டத்தில் 458 ஊராட்சிகளில் 100 சதவீதம் கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. கேரளா மாநிலத்தில் பரவி வரும் தக்காளி காய்ச்சலின் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழக எல்லைகளில் 13 இடங்களில் கண்காணிக்கும் பணிகள் நடந்து வருகிறது. கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத வகையில் கஞ்சா மற்றும் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களின் விற்பனை, தற்போதுள்ள அரசின் அதிரடி நடவடிக்கையால் குறைக்கப்பட்டுள்ளது. கஞ்சா ஆபரேசன் 1, 2 என்ற நடவடிக்கையால் 3 ஆயிரத்து 644 பேர் கைது செய்யப்பட்டதுடன் விற்பனையாளர்களின் பலரது சொத்துகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: திடீர் குறைந்த கொரோனா.. இன்று ஒரே நாளில் 16,678 பேருக்கு தொற்று.. இன்றைய பாதிப்பு நிலவரம்..

முன்னாள் அமைச்சர்கள் மீதான ஊழல் புகார் தொடர்பாக அனைத்து இடங்களிலும் தொடர் சோதனை நடந்து வருகிறது. ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறுவது சரியல்ல. நடவடிக்கை என்பது முதலில் ஆதாரங்கள் திரட்டுவது, அதற்கான ஆவணங்களை சரிப்படுத்துவதாகும். பின்னர் வழக்கு தொடுப்பது என படிப்படியாக தொடரும். மேலும் நிர்வாகம் எடுக்கும் நடவடிக்கைகள் ஊர்ஜிதமாக இருக்க வேண்டும். வழக்கு தொடரப்படும் போது அதில் முழுமையான வெற்றி அரசுக்கு கிடைக்க வேண்டும். எனவே விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார். 

click me!