3 முறை கருக்கலைப்பு.. அமைச்சர் விவகாரத்தில் நடிகை சாந்தினிக்கு டோஸ் விட்ட நீதிபதி.!

Published : Jul 11, 2022, 06:48 PM IST
3 முறை கருக்கலைப்பு.. அமைச்சர் விவகாரத்தில் நடிகை சாந்தினிக்கு டோஸ் விட்ட நீதிபதி.!

சுருக்கம்

தன்னை திருமணம் செய்துகொள்வதாகச் சொல்லி ஏமாற்றியதாக திரைப்பட துணை நடிகை சாந்தினி அளித்த புகாரின் பேரில் முன்னாள் அமைச்சர் மணிகண்டனுக்கு எதிராக அடையாறு அனைத்து மகளிர்  காவல் நிலையத்தில் வழக்குபதிவு செய்யப்பட்டது.

கடந்த அதிமுக ஆட்சியில் தகவல் தொழில்நுட்பதுறை அமைச்சராக இருந்தவர் மணிகண்டன். இவர் தன்னை திருமணம் செய்துகொள்வதாகச் சொல்லி ஏமாற்றியதாக திரைப்பட துணை நடிகை சாந்தினி அளித்த புகாரின் பேரில் முன்னாள் அமைச்சர் மணிகண்டனுக்கு எதிராக அடையாறு அனைத்து மகளிர்  காவல் நிலையத்தில் வழக்குபதிவு செய்யப்பட்டது.

மேலும் செய்திகளுக்கு.. சசிகலாவுடன் இணையும் திவாகரன்..12ம் கட்சி இணைக்கும் விழா - குழப்பத்தில் அதிமுக தொண்டர்கள்!

இந்த வழக்கில் கைது செய்யப்பட்ட மணிகண்டனுக்கு  சென்னை உயர் நீதிமன்றம்,  நிபந்தனை ஜாமீன் வழங்கியது. இந்த வழக்கில் முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீது சைதாப்பேட்டை 11வது நீதிமன்றத்தில் அடையாறு மகளிர் போலீசார் 351 பக்க குற்றப்பத்திரிகையைத் தாக்கல் செய்திருந்தனர்.

வழக்கு நிலுவையில் உள்ள நிலையில், தன் மீதான வழக்கை ரத்து செய்ய கோரி முன்னாள் அமைச்சர் மணிகண்டன் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில்  மனுத்தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த மனு நீதிபதி சதீஷ்குமார் முன்பு விசாரணைக்கு வந்தபோது, நடிகை சாந்தினி சார்பில் இந்த புகாரை திரும்பபெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

மேலும் செய்திகளுக்கு.. அடுத்த பிளான் ரெடி.. தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செல்கிறார் கமல்ஹாசன்.! எதற்கு தெரியுமா?

இதையடுத்து, தன் புகழுக்கு களங்கம் விளைவித்ததாக முன்னாள் அமைச்சர் மணிகண்டன் சார்பில் புகார் அளித்தால் என்னவாகும் என்று கண்டனம் தெரிவித்த நீதிபதி, முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீதான வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளார்.

மேலும் செய்திகளுக்கு.. ஓ.பன்னீர்செல்வத்துக்கு நாங்க உதவி செஞ்சிருப்போம்.. அமைச்சர் மா.சுப்பிரமணியன் சொன்ன சீக்ரெட்

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

அந்த பக்கம் பொய்டாதீங்க.. விஜய் கூட்டணிக்கு செல்ல விடாமல் டிடிவி, ஓபிஸ்க்கு முட்டுக்கட்டை போடும் அண்ணாமலை..?
ஷாக்கிங் நியூஸ்! விஜய் பரப்புரை கூட்டத்துக்கு கைத்துப்பாக்கியுடன் வந்த நபரால் பரபரப்பு! போலீஸ் விசாரணையில் அதிர்ச்சி!