புதுச்சேரியில் நித்யானந்தாவுக்கு 18 அடி உயர சிலை..காவல்துறை ஷாக்.!

Published : Jul 11, 2022, 04:56 PM ISTUpdated : Jul 11, 2022, 04:57 PM IST
புதுச்சேரியில் நித்யானந்தாவுக்கு 18 அடி உயர சிலை..காவல்துறை ஷாக்.!

சுருக்கம்

நித்யானந்தா சிவன்போல் வேடம் அணிந்து கையில் சூலத்துடன் தோன்றிய காட்சியைப் போல் இந்த சிலை வடிவமைக்கப்பட்டுள்ளது.

18 அடி உயர நித்யானந்தா சிலைக்கு கும்பாபிஷேகம் செய்யப்பட்டுள்ளது. இது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. விழுப்புரம் மாவட்டம், வானூரை அடுத்த பெரம்பை (புதுச்சேரி) கிராமத்தில் நித்தியானந்தாவின் சீடரான பாலசுப்பிரமணியம் என்பவர் மலேசிய முருகன் கோவில்போல் இங்கு கோவிலைக் கட்டியுள்ளார்.

மேலும் செய்திகளுக்கு.. சசிகலாவுடன் இணையும் திவாகரன்..12ம் கட்சி இணைக்கும் விழா - குழப்பத்தில் அதிமுக தொண்டர்கள்!

கோயில் பணிகள் நிறைவடைந்த நிலையில் 27 அடி முருகன் கோவிலுக்கு ஸ்ரீ பத்துமலை முருகன் ஆலயம் என பெயரிடப்பட்டு இன்று குடமுழுக்கு விழா நடைபெற்றது. இதேபோன்று கோவிலின் நுழைவுவாயிலில் 18 அடி உயரத்தில் நித்தியானந்தா உருவம் கொண்ட பிரம்மாண்ட சிலை அமைக்கப்பட்டு இந்த சிலைக்கும் இன்று கும்பாபிஷேகம் நடைபெற்றது. 

நித்யானந்தா சிவன்போல் வேடம் அணிந்து கையில் சூலத்துடன் தோன்றிய காட்சியைப் போல் இந்த சிலை வடிவமைக்கப்பட்டுள்ளது. கோவில் நிர்வாகி பாலசுப்பிரமணியன் அறைக்கு சென்று பார்த்த போது. அவர் அறை முழுவதும் நித்தியானந்தா அவருக்கு ஆசி வழங்குவதும், நித்தியானந்தா புகைப்படத்தை ஓவியமாக திட்டி வைத்திருப்பதும் போன்ற புகைப்படங்கள் இருந்தது. 

மேலும் செய்திகளுக்கு.. அடுத்த பிளான் ரெடி.. தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செல்கிறார் கமல்ஹாசன்.! எதற்கு தெரியுமா?

ஏற்கனவே நித்தியானந்தா படங்களை வைத்து அவர் பூஜித்து வந்ததும் தெரியவந்தது. இந்த சிலையைப் பார்த்ததும் காவல் துறை அதிகாரிகள், பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் அதிர்ச்சி அடைந்தனர். நித்தியானந்தா சீடர் முருகன் கோயில் கட்டி அங்கு 18 அடியில் நித்தியானந்தா சிலையை நிறுவி கும்பாபிஷேகம் செய்த நிகழ்வு அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

மேலும் செய்திகளுக்கு.. ஓ.பன்னீர்செல்வத்துக்கு நாங்க உதவி செஞ்சிருப்போம்.. அமைச்சர் மா.சுப்பிரமணியன் சொன்ன சீக்ரெட்

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

போலீஸ் கையைப் பிடித்து கடித்துக் குதறிய தவெக தொண்டர்.. வைரலாகும் விஜய் ரசிகரின் வெறித்தனம்!
அரசு பள்ளி மாணவர்களுக்கு தரமற்ற இலவச சைக்கிள்.. அண்ணாமலையின் பகீர் குற்றச்சாட்டு!