இனி லைசென்ஸ் புதுப்பிக்காவிட்டால் அபராதம் இல்லை - உயர்நீதிமன்றம் அதிரடி..

First Published Apr 4, 2017, 3:52 PM IST
Highlights
There is no penalty if the license renewal


மத்திய அரசின் புதிய விதிமுறைகளை நடைமுறைபடுத்த கூடாது என ஓட்டுநர் பயிற்சி பள்ளி மற்றும் லாரி உரிமையாளர்கள் தொடுத்த வழக்கில் உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியுள்ளது.

கடந்த ஜனவரி மாதம் ஓட்டுனர் உரிமங்கள் பெறுவதற்கான கட்டணங்களை மாற்றி அமைத்து மத்திய அரசு ஆணை பிரபித்தது.

இதில், ஓட்டுனர் உரிமத்தை புதுப்பிக்க 350 ரூபாய் கட்டணம் மட்டும் வசூலிக்கப்பட்டு வந்தது. ஆனால் தற்போது 650 ரூபாயாக உயர்ந்துள்ளது. அதேபோல், வாகனங்களுக்கான தகுதிச்சான்று கட்டணம்  550 ரூபாயில் இருந்து 1,050 ரூபாயாக உயர்ந்துள்ளது.

இரு சக்கர வாகனம் மற்றும் கார் ஓட்டுனர் உரிமம் பெறுவதற்கு  400 ரூபாயில் இருந்து  1100 ரூபாயாக கட்டணம் உயர்ந்துள்ளது.

பயிற்சி உரிமம் பெறுவதற்கான கட்டணம் 90 ரூபாயில் இருந்து 350 ரூபாயாக உயர்ந்துள்ளது.

புதிய இரு சக்கர வாகனம் பதிவு செய்யும் கட்டணம் 60 ரூபாயில் இருந்து, 300 ரூபாயாகவும் காருக்கு 200 ரூபாயில் இருந்து 600 ரூபாயாகவும் உயர்ந்தது.

ஓட்டுநர் உரிமத்தை புதுப்பிக்காவிட்டால் கூடுதல் கட்டணம் அபராதமாக வசூலிக்கப்படும் எனவும் மத்திய அரசு ஆணை பிறப்பித்தது. 

இந்நிலையில், அபராத தொகை வசூலிப்பில், 2016 ஆம் ஆண்டு செப்டம்பர் 29க்கு முன் உள்ள காலத்திற்கு பழைய நடைமுறை எனவும், அதற்கு பின்பு உள்ள காலத்திற்கான அபராத தொகையை, புதிய கட்டணப்படியும் வசூலிக்கும்படி, மத்திய அரசு அறிவுறுத்தியது.

இதற்கு எதிராக ஓட்டுனர் பயிற்சி பள்ளி மற்றும் லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

இந்நிலையில் வாகன திருத்த சட்டத்தில் இரண்டு முக்கிய விதிகளில் திருத்தம் செய்து உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

அதனடிப்படையில் இனிமேல் லைசென்ஸ் புதுப்பிக்காவிட்டால் அபராதம் கிடையாது என உயர்நீதிமன்றம் கூறியுள்ளது.
 

click me!