தமிழக பள்ளிகளில் நடப்பாண்டில் பொது காலாண்டு தேர்வு கிடையாது.. பள்ளிக்கல்வித்துறை வெளியிட்ட முக்கிய அறிவிப்பு.!

By vinoth kumarFirst Published Sep 15, 2022, 1:20 PM IST
Highlights

தமிழகத்தில் கொரோனா பெருந்தொற்று காரணமாக பள்ளிகள், கல்லூரிகள் 2 ஆண்டுகளாக சரிவர இயங்கவில்லை. மேலும் மாணவர்களிடையே கற்றல் இடைவெளி ஏற்படாதவாறு இருக்க மாணவர்களுக்கு ஆன்லைன் முறையில் வகுப்புகள் நடத்தப்பட்டது. 

தமிழக பள்ளிகளில் நடப்பாண்டில் பொது காலாண்டு தேர்வு கிடையாது. ஒவ்வொரு மாவட்டத்திலும் வெவ்வேறு தேதிகளில் காலாண்டு தேர்வை நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என பள்ளிக்கல்வித்துறை தகவல் தெரிவித்துள்ளது. 

தமிழகத்தில் கொரோனா பெருந்தொற்று காரணமாக பள்ளிகள், கல்லூரிகள் 2 ஆண்டுகளாக சரிவர இயங்கவில்லை. மேலும் மாணவர்களிடையே கற்றல் இடைவெளி ஏற்படாதவாறு இருக்க மாணவர்களுக்கு ஆன்லைன் முறையில் வகுப்புகள் நடத்தப்பட்டது. அத்துடன் பொதுத்தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு 2 திருப்புதல் தேர்வுகள் நடத்தப்பட்டது. அப்போது, சமூக வலைத்தளங்களில் வினாத்தாள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

ஆகையால், இதனை தடுக்கும் விதமாக நடப்பு கல்வியாண்டில் காலாண்டு தேர்வு முறையில் மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ளது. தமிழக பள்ளிகளில் நடப்பாண்டில் பொது காலாண்டு தேர்வு கிடையாது என பள்ளிக்கல்வித்துறை கூறியுள்ளது. ஒவ்வொரு மாவட்டத்திலும் வெவ்வேறு தேதிகளில் பள்ளிகளில் காலாண்டு தேர்வை நடத்த நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளது. பள்ளிகளில் இம்மாதம் 30ஆம் தேதியுடன் காலாண்டு தேர்வுகளை நடத்தி முடிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் வழக்கமாக காலாண்டு தேர்வு மாநில அளவில் நடைபெறுவது வழக்கம் என்பது குறிப்பிடத்தக்கது. 

click me!