‘மெட்ராஸ் ஸ்டேட்’டூ ‘தமிழ்நாடு’ அறிஞர் அண்ணாவின் முத்தான முதல் 15 சாதனைகள்...

By Ajmal KhanFirst Published Sep 15, 2022, 11:48 AM IST
Highlights

அறிஞர் அண்ணாவின் பிறந்தாளையொட்டி தமிழகம் முழுவதும் கொண்டாட்டங்கள் நடைபெற்றுவரும் நிலையில், அண்ணாவின் ஆட்சி காலத்தில் ‘மெட்ராஸ் ஸ்டேட்’ என்ற பெயரை மாற்றி, அன்னைத் தமிழகத்துக்கு ‘தமிழ்நாடு’ என்று பெயர் சூட்டியது உள்ளிட்ட பல்வேறு சாதனைகளை நிகழ்த்தி காட்டியுள்ளார். 

தென்னாட்டின் அரசியல் வரலாற்றில் திராவிட அரசியலை நிலைநிறுத்திய  சி.என்.அண்ணாதுரையின் 114-வது பிறந்த தினம் இன்று தமிழகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. அண்ணா என்று அன்புடன் அழைக்கப்படும் சி.என். அண்ணாதுரை கடந்த 1909-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 15-ம் தேதியன்று, நடராஜன் - பங்காரு அம்மாள் ஆகியோருக்கு மகனாக பிறந்தார். அண்ணா, 1949-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 17-ம் தேதியன்று சென்னை ராயபுரத்தில் உள்ள ராபின்சன் பூங்காவில் திராவிட முன்னேற்றக் கழகத்தைத் தொடங்கினார். இதனையடுத்து 1967 ஆம் ஆண்டு அண்ணா தலைமையிலான திமுக ஆட்சியை பிடித்து சாதனை படைத்தது.  எல்லாமும் எல்லோருக்கும் கிடைக்க வேண்டும், தமிழினம் தலைநிமிர்ந்து நடக்க வேண்டும் என்று உழைத்தவர் பேரறிஞர் அண்ணா.. அவரது ஆட்சி காலத்தின் சில சாதனை துளிகள்...

நீங்கள் படிப்பில் மட்டும் கவனம் செலுத்துங்கள்.. உங்கள் தேவைகளை நிறைவேற்ற நான் இருக்கிறேன்.. முதல்வர் ஸ்டாலின்

1. சென்னை செயின்ட் ஜார்ஜ் கோட்டையில், ‘தமிழ்நாடு அரசு தலைமைச் செயலகம்’ என்ற பெயர்ப்பலகை வைக்கப்பட்டது. 

2. தமிழக அரசின் இலச்சினையான கோபுரச் சின்னத்தில் இருந்த ‘கவர்ன்மென்ட் ஆஃப் மெட்ராஸ்’ என்ற வாக்கியம் நீக்கப்பட்டு, ‘தமிழக அரசு’ என்று மாற்றப்பட்டது. 

3. தமிழக அரசு சின்னத்தில் இடம்பெற்றிருந்த ‘சத்யமேவ ஜயதே’ என்ற வடமொழி வாக்கியம், ‘வாய்மையே வெல்லும்’ என மாற்றப்பட்டது

4.‘ஆகாஷ்வாணி’ என்ற வார்த்தைக்குப் பதிலாக வானொலி என்ற வார்த்தையைப் பயன்படுத்த உத்தரவிடப்பட்டது. 

5. 1967-ல் படி அரிசித் திட்டத்தை அமலுக்குக் கொண்டுவந்தார் அண்ணா 

6. ‘மெட்ராஸ் ஸ்டேட்’ என்ற பெயரை மாற்றி, அன்னைத் தமிழகத்துக்கு ‘தமிழ்நாடு’ என்று பெயர் சூட்டியது அண்ணாவின் அரசு.

7.  சுயமரியாதைத் திருமணத்துக்கான சட்ட அங்கீகாரத்தை உருவாக்கியது. 

8. தமிழ்நாட்டில் இந்தித் திணிப்பை அறவே ஒழிக்க ஏதுவாக, இருமொழிக் கொள்கை சட்டத்தை நிறைவேற்றினார்.

9. புன்செய் நிலங்களுக்கு நிலவரி ரத்து செய்யப்பட்டது.

10. பேருந்துகள் அரசுடைமை ஆக்கப்பட்டது.

11. . ஏழைகளுக்கு இலவசக் கல்வி அளிக்க ஏற்பாடு - பி.யு.சி வரையில்.

12. பேருந்துகளில் திருக்குறள் இடம்பெற செய்தது.

13. 1968-ல் இரண்டாவது உலகத் தமிழ் மாநாடு சென்னையிலே நடத்தினார்.

14 . கடற்கரைச் சாலையில் தமிழ்ச் சான்றோர்களுக்குச் சிலை நிறுவினார்.

15. பள்ளிகளில் தேசிய மாணவர் படையில் இந்தி சொற்களை நீக்க ஆணை பிறப்பித்தார்.

இதையும் படியுங்கள்

#TNBreakfast: மாணவர்களுக்கு அன்பாக உணவு பரிமாறி ஊட்டி விட்டு காலை சிற்றுண்டி திட்டத்தை தொடங்கி வைத்த முதல்வர்

 

click me!