
சென்னையில் H1, N1 எனும் புதிய வகை காய்ச்சல் குழந்தைகளிடையே வேகமாக பரவி வருகிறது. தமிழகத்தில் மட்டும் இந்த காய்ச்சலால் இதுவரை 282 குழந்தைகள் பாதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று வருவதாக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்துள்ளார். வேகமாக பரவும் காய்ச்சலால், மருத்துவமனையில் படுக்கைகள் நிரம்பி வருகின்றன. மேலும் நீண்ட வரிசையில் நின்று , சிகிச்சை பெற்று செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. சளி, இருமல் , உடல் சோர்வை போன்றவை புதிய வகை காய்ச்சலின் அறிகுறிகளாக உள்ளன.
அதிலும் குறிப்பாக குழந்தைகள், இளம் வயதினர் அதிக பாதிப்புக்கு உள்ளாகி வருவதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். சென்னையில் உள்ள பெரும்பாலான அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் உள்நோயாளிகள் மற்றும் வெளிநோயாளிகளின் பிரிவு வழக்கத்தை விட, அதிகமாக நிரம்பி வழிவதாக தெரிவிக்கின்றனர்.
மேலும் படிக்க:பெயரளவில் கருத்து கேட்பு கூட்டம்..! அவசர கதியில் விமான நிலைய பணி- திமுக அரசுக்கு எதிராக சீறிய ஓபிஎஸ்
கொரோனா தொற்று காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக முக கவசம் அணிதல், சமூக இடைவெளி போன்றவற்றலால் தொற்று நோய் பாதிப்பு குறைந்தளவில் இருந்தது. இந்நிலையில் தற்போது கொரோனா தொற்று குறைவு காரணமாக தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளதால், தொற்று நோய்களின் பாதிப்பு முன்பை விட தற்போது அதிகரித்துள்ளதாக மருத்துவர்கள் கூறுகின்றனர்.
மேலும் தற்போது பரவும் தோற்று நோய்களால், கடுமையான காய்ச்சல், நடுக்கம், கடும் களைப்பு, தலைவலி, உடல்வலி, தொண்டையில் வறட்சி, வாந்தி, வயிற்று வலி ஆகியவை ஏற்படுவதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை கைகளை எப்போதும் சுத்தமாக வைத்துக்கொள்ளவது மற்றும் பொது இடங்களில் சமூக இடைவெளியை பின்பற்றவது மூலம் தோற்று நோய் பரவாமல் தடுக்கலாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மேலும் படிக்க:#TNBreakfast: மாணவர்களுக்கு அன்பாக உணவு பரிமாறி ஊட்டி விட்டு காலை சிற்றுண்டி திட்டத்தை தொடங்கி வைத்த முதல்வர்
இதுக்குறித்து செய்தியாளர்களை சந்தித்த சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன், தமிழகத்தில் இன்புளுன்ஸா காய்ச்சலால் 282 குழந்தைகள் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர் என்று தெரிவித்தார்.டெங்குவால் 243 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தமிழகத்தில் மட்டும் ஜனவரியில் இருந்து தற்போது வரை டெங்குவால் 3 பேர் உயிரிழந்துள்ளதாகவும் அவர் கூறினார்.
மேலும் பேசிய அவர், சென்னை எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் இன்புளுன்ஸா காய்ச்சலால் யாரும் சிகிச்சை பெறவில்லை. சிகிச்சை பெறும் 129 குழந்தைகளில் 121 பேர் சாதாரண காய்ச்சலா பாதிக்கப்பட்டுள்ளனர். 8 பேருக்கு மட்டுமே டெங்கு காய்ச்சல் பாதிப்பு உள்ளது என்று அவர் கூறினார்.
மேலும் படிக்க:நீங்கள் படிப்பில் மட்டும் கவனம் செலுத்துங்கள்.. உங்கள் தேவைகளை நிறைவேற்ற நான் இருக்கிறேன்.. முதல்வர் ஸ்டாலின்