டெல்லி போன்றதொரு சூழல் தமிழகத்தில் உருவாகலாம்... எச்சரிக்கை விடுத்த ராதாகிருஷ்ணன்!!

Published : Apr 21, 2022, 08:11 PM IST
டெல்லி போன்றதொரு சூழல் தமிழகத்தில் உருவாகலாம்... எச்சரிக்கை விடுத்த ராதாகிருஷ்ணன்!!

சுருக்கம்

கொரோனா தமிழ்நாட்டில் படிப் படியாக அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாகவும் டெல்லி போன்ற சூழல் உருவாகலாம் என்றும் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் எச்சரிக்கை விடுத்துள்ளார். 

கொரோனா தமிழ்நாட்டில் படிப் படியாக அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாகவும் டெல்லி போன்ற சூழல் உருவாகலாம் என்றும் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் எச்சரிக்கை விடுத்துள்ளார். தமிழகத்தில் கொரோனா குறைந்து வருவதை கண்டு சற்று ஆறுதல் அடைந்த நிலையில் கொரோனா வைரஸ் மீண்டும் அதன் ஆட்டத்தை தொடங்கியுள்ளது. சென்னை ஐஐடி விடுதியில் தங்கி இருந்த 3 பேருக்கு கொரோனா தொற்று இருப்பதை கண்டறியப்பட்டது. இதை அடுத்து கொரோனா பாதித்த 3 பேரும் தரமணி விடுதியில் தனியாக தங்க வைக்கப்பட்டிருந்தனர். மேலும் அவர்களுடன் தொடர்பில் இருந்த 300 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் மேலும் 8 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

சுமார் 18 பேருக்கு மேற்கொண்ட பரிசோதனையில் 8 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் சென்னை கிண்டியில் உள்ள ஐஐடியில் மாணவர்கள் உள்பட 12 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஐஐடியில் 12 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், இதில் 3 பேருக்கு அறிகுறி இல்லை என்றும் 8 பேருக்கு லேசான அறிகுறிகள் உள்ளன எனவும் தெரிவிக்கப்படுகிறது. இதனைத் தொடர்ந்து மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், சென்னை ஐஐடியில் 12 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. கொரோனா உறுதி செய்யப்பட்ட மாணவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர்.

தற்போது வரை 365 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. டெல்லி, மகாராஷ்டிரா என எல்லா இடங்களிலும் கொரோனா அதிகரித்து வருகிறது. மாநிலம் முழுவதும் பரிசோதனைகள் எண்ணிக்கை 25 ஆயிரமாக உயர்த்தப்பட உள்ளது. கொரோனா தமிழ்நாட்டில் படிப் படியாக அதிகரிக்க வாய்ப்பு உள்ளது, டெல்லி போன்ற சூழல் உருவாகலாம். இதனால் பொது இடங்களுக்கு செல்லும் போது கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும். கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை கடைபிடிக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார். முன்னதாக மாணவர்களுக்கு அளிக்கப்படும் பாதுகாப்பு குறித்தும், தேவையான உதவிகளையும் செய்யுமாறும் அறிவுறுத்தினார். 

PREV
click me!

Recommended Stories

தமிழகத்தில் எஸ்.ஐ.ஆர். பணியைக் கண்காணிக்க சிறப்பு பார்வையாளர்கள் நியமனம்!
எமர்ஜென்சி எக்ஸிட்..! விஜய் கூட்டத்திற்கு முன்னேற்பாடு.. கலக்கும் புதுவை பெண் போலீஸ் அதிகாரி