மக்களுக்கு மகிழ்ச்சியான விஷயம்..! ரேஷன் பொருட்களை எங்கு வேண்டுமானாலும் வாங்கிக்கொள்ளலாம்...விரைவில் 

 
Published : Oct 03, 2017, 04:04 PM ISTUpdated : Sep 19, 2018, 01:15 AM IST
மக்களுக்கு மகிழ்ச்சியான விஷயம்..! ரேஷன் பொருட்களை எங்கு வேண்டுமானாலும் வாங்கிக்கொள்ளலாம்...விரைவில் 

சுருக்கம்

there is a new option to use smartcard asap

இந்தியா முழுவதும் ஸ்மார்ட்கார்ட் வழங்கும் பணி முடிவடைய இன்னும் சில நாட்களே உள்ளது என்றே கூறலாம்.அந்த அளவிற்கு பணிகள் மிக விரைவாக நடைபெற்று வருகின்றன

இந்நிலையில் ஸ்மார்ட்கார்ட் வந்த பிறகு தற்போது மேலும் ஒரு சூப்பர் திட்டமும் மிக விரைவில் அறிமுகமாக உள்ளது.அதன்படி சொந்த ஊரில்தான் ரேஷன் பொருட்களை வாங்க வேண்டும்என்றோ அல்லது எங்கு நம்முடைய பெயரில் ஸ்மார்ட்கார்ட் உள்ளதோ அங்குதான் பொருட்களை வாங்க வேண்டும் என்ற நிலை மாறி,எங்கு வேண்டுமானாலும் இனி வாங்கிக்கொள்ளும் நிலை உருவாக உள்ளது 

எந்த பகுதியில் உள்ள ரேஷன் கடையிலும், அரிசி, பருப்பு உள்ளிட்ட பொருட்கள் வாங்கும் திட்டத்தை துவக்க, உணவுத் துறை முடிவு செய்துள்ளது.
தமிழக ரேஷன் கடைகளில், அரிசி, கோதுமை இலவசமாகவும், பருப்பு, சர்க்கரை, பாமாயில் ஆகியவை, குறைந்த விலையிலும் வழங்கப்படுகின்றன. தற்போது, ரேஷன் கார்டில் உள்ள முகவரிக்கு, அருகிலுள்ள கடையில் மட்டும் தான், இந்த பொருட்களை வாங்க முடியும்.

ரூ.5,400 கோடி

வீடு மாறி செல்வோர், அந்த விபரத்தை, உணவு வழங்கல் உதவி ஆணையர் அல்லது வட்ட வழங்கல் அலுவலகத்தில் தெரிவித்து, முகவரி மாற்றம் செய்ய வேண்டும். அங்கு தரும் சான்றை, புதிய இடத்தில் உள்ள ரேஷன் கடையில் வழங்கி, பொருட்களை வாங்க முடியும்.

இந்நிலையில், எந்த ரேஷன் கடையிலும், உணவுப் பொருட்கள் வாங்கும் திட்டத்தை துவக்க, உணவுத் துறை முடிவு செய்துள்ளது.உணவு  மானியத்திற்காக, தமிழக அரசு, 5,400 கோடி ரூபாய் செலவிடுகிறது.  சில முறைகேடுகளால், ரேஷன் பொருட்கள், முழுமையாக மக்களை சென்றடையவில்லை. இதற்கு, காகித ரேஷன் கார்டு, பதிவேட்டில் விற்பனை விபரம்பதிவு உள்ளிட்டவை, முக்கிய காரணம்.

தற்போது, ரேஷன் கடைக்கு பொருட்கள் அனுப்புதல், விற்பனை விபரம், 'ஸ்மார்ட்' ரேஷன் கார்டு என, ரேஷன் தொடர்பான அனைத்து பணிகளும், கம்ப்யூட்டர் வாயிலாக மேற்கொள்ளப்படுகின்றன.

முறைகேடுகளுக்கு முடிவு

இதனால், கன்னியாகுமரியில் உள்ள, ஒரு ரேஷன் கடையில் இருக்கும் பொருட்களின் விபரத்தை, சென்னையில் இருந்து கண்காணிக்க முடிகிறது.இன்னும், 20 லட்சம் பேருக்கு மட்டும் தான், ஸ்மார்ட் கார்டு வழங்க வேண்டி உள்ளது. அந்த பணி முடிந்ததும், யார் வேண்டுமானாலும், எந்த ரேஷன் கடையிலும், உணவு பொருட்களை வாங்கி கொள்ளும் திட்டம் துவக்கப்படும்.
இந்த திட்டம் நடைமுறைக்கு வந்தால், மக்கள் மிகவும் பயனடைவர் என்பது குறிப்பிடத்தக்கது
 

PREV
click me!

Recommended Stories

பறக்கும் அரண்மனை வந்தாச்சு.. அரசு வால்வோ பேருந்துகள்.. எந்தெந்த வழித்தடங்கள்? எவ்வளவு கட்டணம்?
100 நாள் வேலை திட்டத்தில் மாற்றம்: தமிழகம் முழுவதும் திமுக, கூட்டணிக் கட்சிகள் போராட்டம்