
ஆந்திர மாநிலம் ராய சீமாவில் உருவாகியுள்ள மேலடுக்கு சுழற்சி காரணமாக, அடுத்து வரும் இரு தினங்களுக்கு தமிழகம் முழுவதும் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு அறிக்கை தகவல் தெரிவித்துள்ளது
ராயா சீமாவிலிருந்து கர்னாடக மாநிலத்தை நிக்கி மெதுவாக நகரத்து வரும் மேலடுக்கு சுழற்சியின் காரணமாக வரும் 6 ஆம் தேதி வரை தமிழகத்தில் மழை தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது
மேலடுக்கு சுழற்சி தீவிரமடைந்துள்ளதால், ஹைதராபாத்தில் பெய்துள்ள கனமழை காரணமாக அங்கங்கு தண்ணீர் தேங்கியுள்ளது மேலும், பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர் .
இதன் காரணமாக வட தமிழகத்தில் இடியுடன் கூடிய கனமழை பெய்யக்
கூடும் எனவும், மற்றபடி தமிழகம் முழுவதுமே ஆங்காங்கு மிதமான மழை தொடரும் எனவும் தெரிவிக்கப் பட்டுள்ளது
இதே போன்று சென்னையை பொறுத்தவரை, மாலை அல்லது இரவு நேரத்தில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என்றும் வானிலை அறிக்கை தெரிவித்துள்ளது
சென்ற ஆண்டை விட இந்த ஆண்டு, எதிர்பார்த்ததை விட அதிகமாக மழை பெய்ததால் விவசாயிகக்ள் மற்றும் பொதுமக்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்