பாஜக அவர் பக்கம் நிற்கிறது.. நடிகை கெளதமியின் சொத்து விவகார பிரச்சனை - உதவிக்கரம் நீட்டும் அண்ணாமலை!

By Ansgar R  |  First Published Oct 23, 2023, 7:32 PM IST

பிரபல நடிகர் உலகநாயகன் கமல்ஹாசன் அவர்களின் மனைவியும், பிரபல நடிகையுமான கௌதமி அவர்கள் சுமார் 25 ஆண்டுகள் பாஜகவில் இருந்த நிலையில், தற்போது அக்கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து விலகுவதாக தெரிவித்துள்ளார். 

there is a misunderstanding bjp stand by gautami side says tamil nadu bjp leader k annamalai ans

தனது 25 கோடி ரூபாய் சொத்துக்களை அழகப்பன் என்பவர் ஏமாற்றி விட்டதாக கூறி புகார் அளித்த கௌதமி அவர்கள், இந்த விஷயத்தில் பாஜக தனக்கு உதவவில்லை என்று கூறி, இதனால் பாஜகவின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து விலகுவதாக தனது ராஜினாமா கடிதத்தை வெளியிட்டு இருந்தார். இதற்கு பாஜக தலைவர்கள் பலரும் அதிருப்தி தெரிவித்து வந்த அதே நேரத்தில், கௌதமி மிகவும் திறமை வாய்ந்த ஒரு நல்ல கலைஞர் என்று அவரை வெகுவாக பாராட்டி வந்தனர்.

இந்நிலையில் தனக்கு "ஆதரவு இல்லாததால்" பாஜகவில் இருந்து நடிகை கௌதமி தடிமல்லா விலகிய சில மணி நேரங்களுக்குப் பிறகு, அக்கட்சியின் தமிழ்நாடு பிரிவுத் தலைவர் கே. அண்ணாமலை வெளியிட்ட அறிக்கையில், கெளதமி அவர்கள் தவறாக புரிந்துகொண்டதாகவும், கட்சி உண்மையில் அவர் பக்கம் தான் இருப்பதாகவும் அவர் கூறினார்.

Latest Videos

கௌதமி பிரச்சினைக்கும் பாஜகவுக்கும் எந்த தொடர்பும் இல்லை: நாராயணன் திருப்பதி விளக்கம்!

இந்த விவகாரம் குறித்து பேசிய அண்ணாமலை அவர்கள், "கௌதமி தாடிமல்லாவிடம் போனில் நான் பேசினேன், அவர் தனது விஷயத்தில் மிக விரைவான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரினார். அதனை அடுத்து எஃப்ஐஆர் பதிவு செய்ய நாங்கள் அவருக்கு ஆதரவளித்தோம், ஆனால் இப்போது சில பாஜகவினர் குற்றம் சாட்டப்பட்டவர்களை பாதுகாக்க முயற்சிப்பதாக அவர் கூறுகின்றார். ஆனால் யாரும் அவரைக் காக்க முயலவில்லை, இப்பொது கூட கௌதமியுடன் பேசியுள்ளேன், அவர் தவறான புரிதலில் உள்ளார் என்று அண்ணாமலை கூறினார். 

A journey of 25 yrs comes to a conclusion today. My resignation letter. pic.twitter.com/NzHCkIzEfD

— Gautami Tadimalla (@gautamitads)

"போலீசார் விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும், குற்றம் சாட்டப்பட்டவரை பாதுகாக்க பாஜகவில் யாரும் முயற்சிப்பதில்லை, அவருக்கும் பாஜகவுக்கும் தொடர்பில்லை...குற்றம் சாட்டப்பட்டவர் கவுதமியுடன் 25 வருடங்கள் நண்பராக இருந்து ஏமாற்றியுள்ளார். இது கவுதமிக்கும் அவருக்கும் இடையே உள்ள ஒரு வழக்கு, ஆனால் நிச்சயம் நாங்கள் இங்கே கௌதமியின் பக்கம் இருக்கிறோம்," என்று அவர் மேலும் கூறினார்.

திடீரென சந்தித்து ஒருவரையொருவர் ஆரத்தழுவிக் கொண்ட அண்ணாமலை, திருமாவளவன்

vuukle one pixel image
click me!
vuukle one pixel image