அச்சமூட்டும் குரங்கு அம்மை.. தமிழக மக்கள் பயப்பட தேவையில்லை.. அமைச்சர் சொன்ன முக்கிய தகவல்

By Thanalakshmi VFirst Published Jul 16, 2022, 3:17 PM IST
Highlights

தமிழகம் பாதுகாப்பாகவே இருக்கிறது என்று மக்கள் யாரும் அச்சப்பட தேவையில்லை என்று சுகாதாரத்துறை அமைச்சர் சுப்ரமணியன் தெரிவித்துள்ளார். மேலும் தமிழகத்தில் இதுவரை யாருக்கும் குரங்கு அம்மை அறிகுறி இல்லை என்றும் அவர் கூறினார்.
 

சென்னை பன்னாட்டு விமான நிலையத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் குரங்கு அம்மை தடுப்பு நடவடிக்கை குறித்து சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் இன்று ஆய்வு செய்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், உலகின் 63 நாடுகளில் குரங்கு அம்மை தாக்கம் கண்டறியப்பட்டுள்ளதாக கூறினார். 

கடந்த 2 ஆம் தேதி அரபு நாட்டிலிருந்து திருவனந்தபுரம் வந்த சிறுமிக்கு குரங்கு அம்மை தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. இந்தியாவில் முதல் குரங்கு அம்மை பாதிப்பு இதுவாகும். இதனை தொடர்ந்து தமிழக- கேரள எல்லையில் கண்காணிப்பு சோதனை திவிரப்படுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக 13 இடங்களில் தடுப்பு அமைத்து, பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது என்று அமைச்சர் தெரிவித்தார். 

மேலும் படிக்க:சர்வதேச அளவிலான செஸ் ஒலிம்பியாட் போட்டி.. தமிழகம் வரும் செஸ் வீரர்களுக்கு குரங்கம்மை சோதனை கட்டாயம்

அது போல் கேரள விமானங்களில் வருவோரும் கண்காணிக்கப்படுவதாக கூறிய அவர், சென்னை ,மதுரை , கோவை திருச்சி பன்னாட்டு விமான நிலையங்களில் வரும் பயணிகளில் 2 % பேருக்கு காய்ச்சல் பரிசோதனை செய்யப்படுகிறது என்றார். மேலும் அவர்கள் குரங்கம்மை பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவதாக குறிப்பிட்டார். குறிப்பாக குரங்கு அம்மை பாதிப்பு அதிகம் கொண்ட குறிப்பிட்ட நாடுகளில் வருவோரில் முகம், கைகளில் கொப்பளங்கள் இருக்கிறதா  உள்ளிட்ட ஆய்வுகள் செய்யப்படுவதாக தெரிவித்தார்.

மேலும் பேசிய அவர், சென்னைக்கு மட்டும் இந்த மாதத்தில் 531 விமானம் மூலம் சுமார் ஒரு லட்சம் பயணிகள் வந்துள்ளனர். தினந்தோறும் 30 முதல் 40 விமானம் மூலம் 5 முதல் 9ஆயிரம் பயணிகள் வருகின்றதாகவும் அதில் 1,987 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டதில் 39 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் கூறினார். 

மேலும் படிக்க:மக்களே கவனத்திற்கு!! சூப்பர் செய்தி.. அரசுப்பேருந்துகளில் இனி பார்சல் அனுப்பலாம்.. எப்படி..? எப்போது..?

தொடர்ந்து பேசிய அவர், தமிழகம் பாதுகாப்பாகவே இருக்கிறது என்று மக்கள் யாரும் அச்சப்பட தேவையில்லை என்றும் அவர் கூறினார். மேலும் தமிழகத்தில்  இதுவரை யாருக்கும் குரங்கு அம்மை அறிகுறி இல்லை என்று தெரிவித்தார்.சென்னையில் குரங்கு அம்மைக்கு சிகிச்சை அளிக்க, ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் 10 படுக்கையுடன் கூடிய சிறப்பு வார்டு அமைக்கப்பட்டுள்ளது. மேலும் குரங்கு அம்மைக்கு சென்னையில் ஒரு ஆய்வகம் அமைக்க மத்திய அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் கூறினார்.

மேலும் படிக்க:நிரம்பிய மேட்டூர் அணை..16 கண்மதகு வழியாக உபரி நீர் திறப்பு.. கரையோர மக்களுக்கு எச்சரிக்கை..

click me!