சர்வதேச அளவிலான செஸ் ஒலிம்பியாட் போட்டி.. தமிழகம் வரும் செஸ் வீரர்களுக்கு குரங்கம்மை சோதனை கட்டாயம்

By Thanalakshmi VFirst Published Jul 16, 2022, 1:39 PM IST
Highlights

செஸ் ஒலிம்பியாட் வீரர்களுக்கு குரங்கு அம்மை பரிசோதனை செய்ய தமிழக சுகாதாரத்துறை திட்டமிட்டுள்ளது. செஸ் ஒலிம்பியாட் போட்டியில் பங்கேற்க சென்னை வரும் அனைத்து வீரர்களுக்கும் கொரோனா, குரங்கு அம்மை பரிசோதனை செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
 

செஸ் ஒலிம்பியாட் வீரர்களுக்கு குரங்கு அம்மை பரிசோதனை செய்ய தமிழக சுகாதாரத்துறை திட்டமிட்டுள்ளது. செஸ் ஒலிம்பியாட் போட்டியில் பங்கேற்க சென்னை வரும் அனைத்து வீரர்களுக்கும் கொரோனா, குரங்கு அம்மை பரிசோதனை செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் படிக்க:செஸ் ஒலிம்பியாட் : இந்தியா நடத்துகிறதா...? இல்லை திமுக ஸ்டாலின் நடத்துகிறாரா? தேசிய கொடி இல்லாத டீசர்!

இந்தியாவில் முதல்முறையாக சென்னை மாமல்லபுரத்தில் வரும் ஜுலை 28 ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 10 ஆம் தேதி வரை செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் நடைபெறவுள்ளன. இதற்கான முன்னேற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் செஸ் ஒலிம்பியாட் போட்டி தொடக்கவிழாவில் கலந்துக்கொள்ள பிரதமர் மோடிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. 

சர்வதேச அளவிலான செஸ் ஒலிம்பியாட் போட்டி குறித்தான டீசர் வெளியிடப்பட்டுள்ளது. ஏறத்தாழ 188 நாடுகளிலிருந்து 2500-க்கும் மேற்பட்ட வீரர்கள் 343 அணிகளாக பங்கேற்கவுள்ளனர். தமிழகத்தைச் சேர்ந்த 3 அணிகள் பங்கேற்கின்றனர். போட்டிகளை சிறப்பாக நடத்தி தமிழக அரசு சார்பில் பல்வேறு துறைகளை சார்ந்த 19 உயரதிகாரிகள் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க:Watch : சர்சைகளில் சிக்கித் தவிக்கும் செஸ் ஒலிம்பியாட் டீசர்! - விமர்சகர்கள் குற்றச்சாட்டு!

கடந்த 12 ஆம் தேதி தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் போட்டி நடைபெறும் பகுதிகளை ஆயுவு செய்தார். செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் தலைமையில் ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் செஸ் ஒலிம்பியாட் வீரர்களுக்கு குரங்கு அம்மை பரிசோதனை செய்ய தமிழக சுகாதாரத்துறை திட்டமிட்டுள்ளது. 

செஸ் ஒலிம்பியாட் போட்டியில் பங்கேற்க சென்னை வரும் அனைத்து வீரர்களுக்கும் கொரோனா, குரங்கு அம்மை பரிசோதனை செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. வீரர்களுக்கு மேற்கொள்ளப்படும் பரிசோதனையில் நெகட்டிவ் வந்தால் மட்டுமே செஸ் ஒலிம்பியாட்டில் பங்கேற்க அனுமதி வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் வீரர்களுக்கு பாசிடிவ் உறுதியானால், சிகிச்சை அளிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 

மேலும் படிக்க:44th Chess Olympiad Video: பிரதமர் மோடியை விமர்சித்தவர்கள் இன்று மவுனம் ஏன்?

click me!