அரிசி ஆலைகள் அடைப்பு.. ஜிஎஸ்டி வரியை நீக்கக்கோரி வேலை நிறுத்த போராட்டம்.. அரிசி விலை உயரும் என எச்சரிக்கை

By Thanalakshmi VFirst Published Jul 16, 2022, 12:35 PM IST
Highlights

அரிசி மீதான 5% ஜிஎஸ்டி வரியை நீக்கக்கோரி தமிழகத்தில் அரிசி ஆலைகள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளன. வேலை நிறுத்தத்தில் சுமார் 4,000 அரிசி ஆலைகள், 20,000 சில்லறை விற்பனை கடைகள் ஈடுப்பட்டுள்ளன.  ஒரு கிலோ அரிசி விலை ரூ.3 முதல் ரூ.5 வரை உயரும் என்பதால் 5% ஜிஎஸ்டி வரியை நீக்கக்கோரி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
 

அரிசி மீதான 5% ஜிஎஸ்டி வரியை நீக்கக்கோரி தமிழகத்தில் அரிசி ஆலைகள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளன. வேலை நிறுத்தத்தில் சுமார் 4,000 அரிசி ஆலைகள், 20,000 சில்லறை விற்பனை கடைகள் ஈடுப்பட்டுள்ளன.  ஒரு கிலோ அரிசி விலை ரூ.3 முதல் ரூ.5 வரை உயரும் என்பதால் 5% ஜிஎஸ்டி வரியை நீக்கக்கோரி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

அரிசி மீது மத்திய அரசு விதித்துள்ள 5 % ஜிஎஸ்டி வரியை திரும்ப பெற வலியுறுத்தி அரசி ஆலை உரிமையாளர்கள் இன்று வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தமிழகம், ஆந்திரா, கேரளா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் அரிசி ஆலைகள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன. தமிழகத்தை பொறுத்தவரை 4,000 அரிசி ஆலை உரிமையாளர்கள் இன்று ஒரு நாள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 

மேலும் படிக்க:செஸ் ஒலிம்பியாட் : இந்தியா நடத்துகிறதா...? இல்லை திமுக ஸ்டாலின் நடத்துகிறாரா? தேசிய கொடி இல்லாத டீசர்!

அதே போல், 20,000 அரிசி மொத்த சில்லறை விற்பனை கடைகளும் இன்று மூடப்பட்டுள்ளன. முன்னதாக திருப்பூரில் அரிசி ஆலை சங்க அலுவலகத்தில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில், பண்டல் செய்யப்பட்ட அரிசிக்கு 5 சதவீதம் ஜி.எஸ்.டி. வரி விதிப்பை விலக்கிக்கொள்ள வலியுறுத்தி ஒருநாள் வேலைநிறுத்தம் செய்வது குறித்து முடிவெடுக்கப்பட்டது. 

சமீபத்தில் நடைபெற்ற ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டத்தில் பண்டல் செய்யப்பட்ட அரிசி, கோதுமை, பருப்பு என அனைத்து வகை உணவு தானியங்களுக்கும் 5 % வரி விதிப்பு அறிவிக்கப்பட்டது. இதுவரை பதிவு பெற்ற நிறுவனங்களுக்கு மட்டுமே 5 % வரி விதிக்கப்பட்ட நிலையில், அனைத்து விதமான அரிசி மூட்டைக்கும் 5 சதவீத வரி அமல்படுத்தப்படும் என்று மத்திய அரசு அறிவித்தது. இதனால் கிலோ அரிசி ரூ.3 முதல் ரூ.5 வரை உயரும் என்று தெரிவிக்கப்படுகிறது. 

மேலும் படிக்க:44th Chess Olympiad Video: பிரதமர் மோடியை விமர்சித்தவர்கள் இன்று மவுனம் ஏன்?

இந்நிலையில் மத்திய அரசு உடனடியாக வரி விதிப்பை விலக்கிக்கொள்ள வலியுறுத்தி அகில இந்திய அளவில் அரிசி ஆலை உரிமையாளர்கள், மொத்த மற்றும் சில்லறை வணிகர்கள் ஒரு நாள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.  அதன்படி தமிழகத்தில் சுமார் 4,000 அரிசி ஆலைகள், 20,000 சில்லறை விற்பனை கடைகளும் வேலை நிறுத்தத்தில் ஈடுப்பட்டுள்ளன. அதன்படி திருப்பூர் மாவட்டத்தில் மட்டும் மொத்தம் 205 அரிசி ஆலைகள், ஆயிரத்துக்கும் மேற்பட்ட சில்லறை விற்பனை கடைகள் மூடப்பட்டுள்ளன. 

மேலும் படிக்க:மக்களே கவனத்திற்கு!! சூப்பர் செய்தி.. அரசுப்பேருந்துகளில் இனி பார்சல் அனுப்பலாம்.. எப்படி..? எப்போது..?

click me!