தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை கட்டிடத்தின் நான்காவது மாடியில் ஏறி நின்று தற்கொலை மிரட்டல் விடுத்த மாற்றுத்திறனாளி ஊழியரால் பரபரப்பு ஏற்பட்டது.
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே க.விலக்கு பகுதியில் அமைந்துள்ளது தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை. இங்கு நாள்தோறும் மூவாயிரத்திற்கும் மேற்பட்ட உள் மற்றும் புற நோயாளிகளுக்கு இந்த மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த மருத்துவமனையின் பராமரிப்பு பணிகளை கிறிஸ்டல் என்ற தனியார் நிறுவனம் மேற்கொள்கிறது. இந்த நிறுவனத்தில் ஆண்கள், பெண்கள் உட்பட நூற்றுக்கும் மேற்பட்ட தற்காலிக தொழிலாளிகள் மருத்துவமனையில் துப்புரவு பணி, பராமரிப்பு பணி, பாதுகாப்பு உள்ளிட்ட அனைத்து பணிகளிலும் ஈடுபட்டு வருகின்றனர்.
undefined
கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக தனியார் ஏஜென்சியின் கீழ் லிப்ட் ஆபரேட்டராக பணிபுரிந்து வருபவர் செல்வம். மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அருகே உள்ள சிலோன் காலனியில் குடியிருந்து வருகிறார். மாற்றுத்திறனாளியான செல்வம் கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக தொடர்ந்து லிப்ட் ஆப்பரேட்டராகவே பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில் செல்வத்திற்கு லிப்ட் ஆபரேட்டர் வேலைக்குப் பதிலாக ஸ்ட்ரக்சர் தள்ளும் வேலை அழைக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
மாற்றுத்திறனாளியான தன்னால் ஸ்ட்ரக்சர் தள்ளிக்கொண்டு நான்கு மாடிகளில் ஏறி இறங்க முடியாது என்று செல்வம் எவ்வளவோ எடுத்துக் கூறியும் கட்டாயமாக வேலை மாற்றம் செய்ததாக கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து இன்று காலை அரசு மருத்துவமனை கட்டிடத்தின் நான்காவது மாடியில் ஏறி கீழே குதித்து தற்கொலை செய்யப்போவதாக செல்வம் மிரட்டல் விடுத்தார்.
தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை கட்டிடத்தின் நான்காவது மாடியில் ஏறி நின்று தற்கொலை மிரட்டல் விடுத்த மாற்றுத்திறனாளி ஊழியர் pic.twitter.com/2TXLOWqnr5
— Asianetnews Tamil (@AsianetNewsTM)இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது மருத்துவமனை ஊழியர்கள், மருத்துவர்கள்,நர்ஸ்கள் என அனைவரும் அவ்விடத்தில் திரண்டனர். சுமார் ஒரு மணி நேரத்திற்குப் பின் அவருடன் பணியாற்றும் சக ஊழியர்கள், மற்றும் காவல்துறையினர் மேலே ஏறிப் போய் அவரிடம் நைசாக பேச்சு கொடுத்து அவரை பத்திரமாக மீட்டனர். பின்னர் மருத்துவக் கல்லூரி முதல்வர் அறைக்கு கொண்டு செல்லப்பட்ட அவரிடம் நிலைய மருத்துவர் ராதா தற்போது விசாரணை மேற்கொண்டு வருகிறார். இதனால் தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை பரபரப்பு ஏற்பட்டது.
இதையும் படிங்க : Alert : மே 14 ஆம் தேதி முதல் பள்ளிகளுக்கு விடுமுறை..அரசு எடுத்த அதிரடி முடிவு !