தமிழகத்தில் 2.19 கோடிக்கும் மேற்பட்ட ரேஷன் கார்டுகள் உள்ளன. இவற்றுக்கு கூட்டுறவு மற்றும் உணவுத் துறையின் கீழ் செயல்படும் 35,296 ரேஷன் கடைகள் மூலம் அத்தியாவசியப் பொருட்கள் வழங்கப்படுகின்றன. இந்நிலையின், இலவசமாக வழங்கப்படும் அரிசியின் தரம்குறித்து அவ்வப்போது புகார் எழுந்து வந்தது.
நியாயவிலைக் கடைகளில் தரமான பொருட்கள் வழங்குவதை உறுதி செய்யும் வகையில், மாவட்டம்தோறும் 4 அதிகாரிகள் கொண்ட கண்காணிப்புக் குழுவை தமிழக அரசு நியமித்துள்ளது.
தொடர் புகார்
தமிழகத்தில் 2.19 கோடிக்கும் மேற்பட்ட ரேஷன் கார்டுகள் உள்ளன. இவற்றுக்கு கூட்டுறவு மற்றும் உணவுத் துறையின் கீழ் செயல்படும் 35,296 ரேஷன் கடைகள் மூலம் அத்தியாவசியப் பொருட்கள் வழங்கப்படுகின்றன. இந்நிலையின், இலவசமாக வழங்கப்படும் அரிசியின் தரம்குறித்து அவ்வப்போது புகார் எழுந்து வந்தது. இதை தவிர்க்க, தரமற்ற அரிசியை கடைகளுக்கு அனுப்பக் கூடாது என்று பொறுப்புஅதிகாரிகளுக்கும், அவ்வாறுவந்தால் அதை மக்களுக்கு விநியோகம் செய்யக் கூடாது என்று கடைபணியாளர்களுக்கும் உணவுத் துறை உத்தரவிட்டுள்ளது. இருப்பினும் சில இடங்களில் தவறுகள் நடந்த வண்ணம் இருந்தன.
undefined
தலைமைச் செயலர் இறையன்பு ஆய்வு
இந்நிலையில், சென்னையில் சில நியாயவிலைக் கடைகளில் பொருட்களை தலைமைச் செயலர் இறையன்பு 30-ம் தேதி ஆய்வுசெய்தார். அப்போது, உணவுப்பொருள் வழங்கல் ஆணையர் ராஜாராமனும் உடன் இருந்தார். இதைத் தொடர்ந்து, பொருட்களை தரமாக வழங்க வேண்டும் என்று உணவுத் துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டது. தற்போது நியாயவிலைக் கடைகளில் தரமான பொருட்களை வழங்குவதை உறுதி செய்ய மாவட்டம் தோறும் 4 அதிகாரிகள் கொண்ட கண்காணிப்புக் குழுவை அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
தரமான பொருட்கள்
இக்குழு ஒருங்கிணைப்பாளராக மாவட்ட வழங்கல் அலுவலர் செயல்படுவார். உறுப்பினர்களாக நுகர்பொருள் வாணிபக் கழக முதுநிலை மண்டல மேலாளர்,கூட்டுறவுத் துறை மண்டல இணை பதிவாளர், குடிமைப் பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு துணை கண்காணிப்பாளர் செயல்படுவார்கள். மாதம்தோறும் முதல் மற்றும் 3-வது திங்கள் கிழமைகளில் இந்த குழு கூடி, நியாயவிலைக் கடைகளில் தரமான பொருட்கள் வழங்குவதையும், சரியான நேரத்தில் மக்களுக்கு பொருட்கள் கிடைக்கிறதா என்பதையும் ஆய்வு செய்து விவர அறிக்கையை உணவு வழங்கல்ஆணையருக்கு அனுப்புமாறு அரசு உத்தரவிட்டுள்ளது.