நேற்று ஒரே நாளில் இத்தனை கோடிக்கு மது விற்பனையா? சென்னையை ஓரங்கட்டிய மதுரை.. தெறிக்கவிட்ட குடிமகன்கள்.!

By vinoth kumar  |  First Published May 1, 2022, 1:04 PM IST

குடிமகன்கள் இன்றைக்கு மது அருந்துவதற்காக, நேற்று கூடுதலாக மது பாட்டில்களை வாங்கி சென்றனர். எனவே, டாஸ்மாக் கடைகளில் நேற்று கூட்டம் அலைமோதியதால் மது விற்பனை களைகட்டியது. இந்நிலையில், மதுக்கடைகளுக்கு இன்று விடுமுறை என்பதால் நேற்று அதிகளவில் மது விற்பனையாகியுள்ளது. அதன்படி, தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் மட்டும் ரூ.252.34 கோடிக்கு மது விற்பனை செய்யப்பட்டுள்ளது.


தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் ரூ.252.34 கோடிக்கு மது விற்பனை செய்யப்பட்டுள்ளது. அதிகபட்சமாக மதுரை மண்டலத்தில் ரூ.54.89 கோடிக்கு விற்பனையாகியுள்ளது. 

டாஸ்மாக் கடை விடுமுறை

Tap to resize

Latest Videos

தமிழக அரசின் டாஸ்மாக் நிறுவனம் சில்லரை கடைகள் வாயிலாக பீர் மற்றும் மது வகைகளை விற்பனை செய்து வருகிறது. தினமும் சராசரியாக, 100 கோடி ரூபாய் மதிப்பிலான மது வகைகள் விற்கப்படுகின்றன. இது சனி, ஞாயிறு வார விடுமுறை நாட்களில் அதிகரிக்கிறது. இந்நிலையில், தொழிலாளர் தினமான மே தினத்தை முன்னிட்டு ஞாயிற்றுக் கிழமையான இன்று மதுக்கடைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 

undefined

ரூ.252.34 கோடிக்கு மது விற்பனை

இதனால், குடிமகன்கள் இன்றைக்கு மது அருந்துவதற்காக, நேற்று கூடுதலாக மது பாட்டில்களை வாங்கி சென்றனர். எனவே, டாஸ்மாக் கடைகளில் நேற்று கூட்டம் அலைமோதியதால் மது விற்பனை களைகட்டியது. இந்நிலையில், மதுக்கடைகளுக்கு இன்று விடுமுறை என்பதால் நேற்று அதிகளவில் மது விற்பனையாகியுள்ளது. அதன்படி, தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் மட்டும் ரூ.252.34 கோடிக்கு மது விற்பனை செய்யப்பட்டுள்ளது.

மதுரையில் விற்பனை அதிகம்

அதிகபட்சமாக மதுரை மண்டலத்தில் ரூ.54.89 கோடிக்கு மது விற்பனை செய்யப்பட்டுள்ளது. அடுத்தபடியாக சென்னை மண்டலத்தில் ரூ. 52.28 கோடிக்கும் மது விற்பனையாகியுள்ளது. திருச்சி மண்டலத்தில் ரூ.49.78 கோடிக்கும், சேலம் மண்டலத்தில் 48.67 கோடிக்கும், கோவை மண்டலத்தில் ரூ.46.72 கோடிக்கும் மது விற்பனை செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

click me!