
திருவாரூர்
திருவாரூரில் நடுரோட்டில் நின்றுக் கொண்டிருந்த மாட்டின் மீது இருசக்கர வாகனம் வேகமாக மோதியதில் தடுமாறி கீழே வீழுந்து காயமடைந்த இளைஞர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார்.
திருவாரூரைச் சேர்ந்த செல்வராஜ் மகன் வெங்கடேஷ். இவர், திருவாரூருக்கும், திருத்துறைப்பூண்டிக்கு இடையே உள்ள புதூர் சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்றுவிட்டு, திருவாரூருக்கு திரும்பிக் கொண்டிருந்தார்.
அப்போது மாங்குடி என்ற இடத்தில் வரும்போது, சாலையின் நடுவே நின்றுக் கொண்டிருந்த மாட்டின் மீது வேகமாக இருசக்கர வாகனத்தில் மோதியுள்ளார்.
வேகமாக வந்த இருசக்கர வாகனம் மாட்டின் மீது மோதியதில் நிலைதடுமாறி கீழே விழுந்த வெங்கடேஷ்க்கு பலத்த காயம் ஏற்பட்டது.
விபத்து ஏற்பட்டு ஒருவர் கீழே விழுந்து கிடப்பதைப் பார்த்த அந்த வழியாக சென்றவர்கள் வெங்கடேஷை திருவாரூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு, சிகிச்சைப் பலனளிக்காமல் வெங்கடேஷ் பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து திருவாரூர் தாலுகா காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் இந்த விபத்து குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மாட்டின் மீது வேகமாக மோதி ஒருவர் பலியான சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.