
தமிழகம் முழுவதும் 30-க்கும் மேற்பட்ட இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் சோதனை செய்து வருகின்றனர். போக்குவரத்து துறை, பத்திரப்பதிவுத் துறை உள்ளிட்ட அரசு அலுவலங்களில் சோதனை நடைபெற்று வருகிறது. தீபாவளியை முன்னிட்டு அதிகாரிகள் வசூல் வேட்டையில் இறங்குவதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதுவரை கணக்கில் வராத ரூ.2 லட்சம் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என்று தகவல் வெளியாகி உள்ளது. இதே போல் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகத்திலும் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தி வருகின்றனர்.
தீபாவளி வசூலைத் தடுக்க தமிழகம் முழுவதும் 30க்கும் மேற்பட்ட அரசு அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி சோதனை என்று கூறப்படுகிறது.
இதையும் படிங்க..2 பெண்களை துண்டு துண்டாக வெட்டி நரபலி கொடுத்த விவகாரம்.. போலீசாருக்கு ஷாக் கொடுத்த திக் திக் நிமிடங்கள் !