விஜயை வைத்து மீண்டும் சீமானை வம்புக்கிழுக்கும் விஜயலட்சுமி! பகீர் கிளப்பும் புது வீடியோ

Published : Jun 07, 2022, 08:39 AM ISTUpdated : Jun 07, 2022, 08:46 AM IST
விஜயை வைத்து மீண்டும் சீமானை வம்புக்கிழுக்கும் விஜயலட்சுமி! பகீர் கிளப்பும் புது வீடியோ

சுருக்கம்

 சீமான் தன்னை கல்யாணம் செய்து கொள்வதாக கூறி ஏமாற்றி விட்டதாக புகார் கூறி வரும் நடிகை விஜயலட்சுமி தற்போது புது வீடியோ ஒன்றை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

தமிழகத்தில் சீமான் என்னை வாழவிடவில்லை

பிரண்ட்ஸ் படத்தில் நடிகர் விஜயின் சகோதரியாக அறிமுகமான நடிகை  விஜயலட்சுமி, நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது கடந்த சில வருடங்களாக புகார் கூறி வருகிறார். `வாழ்த்துகள்' என்ற படத்தில் நடித்துக்கொண்டிருக்கும் போது நான் சீமானை சந்தித்ததாகவும், அந்தப் படத்தின் இயக்குநரான அவர் படப்பிடிப்பின்போது என்னிடம் அன்பாக நடந்துகொண்டதாகவும், அப்போது, என் வீட்டுக்கு வந்த சீமான் என்னைத் திருமணம் செய்துகொள்வதாகக் கூறியதாகவும் தெரிவித்திருந்தார். மேலும் 2008-ம் ஆண்டு முதல் 2011 வரை நான் சீமானுடன் நட்பில் இருந்தேன். ஹோட்டலில் மூன்று, நான்கு முறை அவருடன் தங்கியுள்ளேன். சீமானுடன் நான் நட்பில் இருந்தபோது உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் என்னை அவர் கன்ட்ரோலில் வைத்திருந்தார். எனக்கு மருந்துகள் கொடுத்து நான் கருத்தரிப்பதை அவர் தடுத்ததாக புகார் கூறியிருந்தார். மூன்று வருடம் அவருடன் நான் வாழ்ந்த பிறகு திருமணம் செய்துகொள்ள நினைத்தேன். ஆனால் அவர் திருமணம் செய்ய மறுத்து ஏமாற்றிவிட்டார் என விஜயலட்சுமி புகார் கூறியிருந்தார்.

இந்து கடவுள்களை விமர்சித்த சீமான்

இது போன்ற பல புகார்களை நடிகை விஜயலட்சுமி சமூக வலை தளங்கள் மூலம் அவ்வப்போது வீடியோவாக பதிவிட்டு  தற்கொலை முயற்ச்சியிலும் விஜயலட்சுமி ஈடுபட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு மீட்கப்பட்டார். இந்தநிலையில் நீண்ட நாட்களுக்கு பிறகு நடிகை விஜயலட்சுமி தற்போது வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் நான் எங்கு சென்றாலும் நடிகர் விஜயின் சகோதரி என்று தான் மக்கள் அடையாளப்படுத்துகிறார்கள். எனவே விஜய் அண்ணாவிற்கு தற்போது தகவல் ஒன்றை கூற விரும்பவுதாக தெரிவித்துள்ளார். எனது அக்காவிற்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால் அறுவை சிகிச்சை செய்த போது சீமான் ஆதரவாளர்கள் வீட்டில் இருந்து வெளியேற்றியதாக கூறினார். இதன் காரணமாக எனக்கு சொந்த வீடு கூட இல்லாமல் பாதிக்கப்பட்டதாக  தெரிவித்துள்ளார். தற்போது விஜயின் பழைய படத்தை தூசி தட்டி பிள்ளையாளர் பற்றி பேசியது மதுரை ஆதினம்  கண்ணில் பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். ஆனால் சீமானை ஆதினம் தம்பி என கூப்பிடுகிறார். ஆதினத்தின் தம்பி பல முறை இந்து கடவுளை விமர்சித்துள்ளார்.  லிங்கத்தை விமர்சிக்கும் வகையில் அவதூறான கருத்தை  சீமான் தெரிவித்துள்ளார், ராமர் டோபி பேச்சு கேட்டு தனது மனைவியை வனவாசம் அனுப்பியதாகவும் கூறியுள்ளார்.ஆனால் இதை மதுரை ஆதினம் விமர்சிக்கவில்லை என தெரிவித்துள்ளார். 

நடிகர் விஜய் குரல் கொடுக்க வேண்டும்

சீமான் படமான பகலவன் படத்தில்  நடிக்க மாட்டேன் என விஜய் சொன்னதை நினைவில் வைத்து சீமான் பழிவாங்குவதாக கூறியுள்ளார்.சூப்பர் ஸ்டார் ரஜினிக்கும் கடும் மன உளைச்சலை சீமான் வழங்கியதாக தெரிவித்துள்ளார். என்னை தமிழகத்தில் வாழ கூட சீமான் விடவில்லையென விஜயலட்சுமி தெரிவித்துள்ளார். சீமானின் மன நிலை பாதிக்கப்பட்டுள்ளதாகவும், பித்து பிடித்துள்ளதாக தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டை ஆள வேண்டும், ஆள வேண்டும் என சீமானின் மன நிலை பாதித்துள்ளதாக கூறியுள்ளார். எனவே விஜய் அண்ணன் சீமானுக்கு எதிராக குரல் கொடுக்க வேண்டும் என நடிகை விஜயலட்சுமி வெளியிட்டுள்ள வீடியோவில் கேட்டுக்கொண்டுள்ளார்.

இதையும் படியுங்கள்

ஜிம் உடற்பயிற்சியின் போது திடீர் மாரடைப்பு.. 27 வயது இளைஞர் துடிதுடித்து பலி.. மதுரையில் சோகம்..!
 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

Tamil Nadu Rain Alert: தீபாவளிக்கு மழை எச்சரிக்கை! தமிழகத்தின் 7 மாவட்டங்களில் இன்று கனமழை
Rain Today: சென்னை மட்டுமல்ல.. காஞ்சிபுரம், திருவள்ளூரிலும் கனமழை! தமிழகத்தில் மழைக்கு என்ன காரணம்?