விடுதலை கோரிய நளினியின் வழக்கு... தீர்ப்பை ஒத்திவைத்தது சென்னை உயர்நீதிமன்றம்!!

Published : Jun 06, 2022, 05:04 PM IST
விடுதலை கோரிய நளினியின் வழக்கு... தீர்ப்பை ஒத்திவைத்தது சென்னை உயர்நீதிமன்றம்!!

சுருக்கம்

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தன்னை விடுதலை கோரி நளினி தொடர்ந்த வழக்கின் தீர்ப்பை சென்னை உயர் நீதிமன்றம் ஒத்தி வைத்து உத்தரவிட்டுள்ளது. 

ராஜீவ்காந்தி கொலை வழக்கில் தன்னை விடுதலை கோரி நளினி தொடர்ந்த வழக்கின் தீர்ப்பை சென்னை உயர் நீதிமன்றம் ஒத்தி வைத்து உத்தரவிட்டுள்ளது. ராஜீவ்காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன், சாந்தன், முருகன், நளினி, ரவிச்சந்திரன், ஜெயக்குமார், ராபர்ட்ஸ் பயர்ஸ் ஆகிய 7 பேரும் 30 ஆண்டுகளுக்கு மேலாக சிறை தண்டனை அனுபவித்து வருகின்றனர். இதில் பேரறிவாளனை விடுதலை செய்து உச்சநீதிமன்றம் அண்மையில் உத்தரவிட்டது. அதை அடுத்து அவர் விடுதலை செய்யப்பட்டார். இதனை தொடர்ந்து ஆளுநரின் ஒப்புதலுக்கு காத்திருக்காமல் தங்களையும் இந்த வழக்கில் இருந்து விடுவிக்க வேண்டும் என நளினியும், ரவிச்சந்திரனும் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

நளினியின் மனுவில், அரசியலமைப்புக்கு விரோதமாக ஆளுநர் செயல்பட்டிருந்தால் அதை சட்டவிரோதம் என உயர் நீதிமன்றம் அறிவிக்கலாம். ஆளுநர் எந்த முடிவும் எடுக்காமல் குடியரசு தலைவருக்கு அனுப்பியதால், மீண்டும் அளுநருக்கு அனுப்பக்கூடாது என தெரிவிக்கப்பட்டிருந்தது. நளினியின் இந்த வழக்கு உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி முனீஷ்வர் நாத் பண்டாரி, நீதிபதி மாலா அமர்வு முன்பு இன்று விசாரணை வந்தது. அப்போது நளினி, ரவிச்சந்திரனை விடுதலை செய்ய உயர்நீதிமன்றமே பரிசீலிக்கலாம் என தமிழக அரசு வாதிட்டது. இதையடுத்து தமிழக அமைச்சரவை தீர்மானத்தின் படி விடுதலை செய்ய கோரி நளினி, ரவிச்சந்திரன் தாக்கல் செய்த வழக்குகளில் தீர்ப்பை ஒத்திவைத்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி முனீஷ்வர் நாத் பண்டாரி, நீதிபதி மாலா அமர்வு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. 

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

ஒரு தலைவருக்கு இது கூடவா தெரியாது.. விஜய்யை கழுவி ஊற்றிய புதுச்சேரி அமைச்சர்.. என்ன விஷயம்?
நீதிபதி சுவாமிநாதனை பதவி நீக்க வேண்டும்.. தீர்மானமாக வழங்கிய இந்தியா கூட்டணி உறுப்பினர்கள்..