பேருந்தில் எத்தனை மகளிர் இலவசமாக பயணித்துள்ளார்கள் தெரியுமா..? போக்குவரத்து துறை வெளியிட்ட புதிய தகவல்

By Ajmal KhanFirst Published Oct 6, 2022, 2:53 PM IST
Highlights

பேருந்தில் இலவசமாக பயணிக்கும் மகளிர்களை திமுக அமைச்சர் விமர்சித்ததாக தகவல் வெளியான நிலையில் இதுவரை 176 கோடியை 84 லட்சம் மகளிர் இலவசமாக பயணித்துள்ளதாக போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.
 

பேருந்தில் இலவச பயணம்

திமுக ஆட்சிக்கு வந்தால் பேருந்தில் இலவசமாக பெண்கள் பயணம் செய்யலாம் என அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதனையடுத்து நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணி மிகப்பெரிய வெற்றி பெற்றது. இதனையடுத்து பேருந்தில் இலவச பயணம் தொடர்பான அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டது. அதன் படி, 2021 ஆம் ஆண்டு மே மாதம் 8 ஆம் தேதி அனுமதி வழங்கப்பட்டது. இதே போல திருநங்கைகள், மாற்று திறனாளிகளுக்கும் இலவசமாக பேருந்தில் பயணிக்க அனுமதி வழங்கப்பட்டது. இந்தநிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பேருந்தில் பெண்கள் ஓசியாக பயணம் செய்வதாக அமைச்ர் பொன்முடி பொதுக்கூட்டம் ஒன்றில் பேசியிருந்தார். இந்த பேச்சு தமிழகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் ஓசியில் பயணிக்க மாட்டோம் என ஒரு சில இடங்களில் பெண்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

ஸ்டாலினுக்காக அப்போ வைகோ..! உதயநிதிக்காக இப்போ யார் தெரியுமா..? திமுகவை இறங்கி அடிக்கும் ஜெயக்குமார்

176 கோடி முறை இலவச பயணம்

இதனையடுத்து அதிமுக, பாஜக உள்ளிட்ட கட்சிகள் திமுகவை விமர்சித்து கருத்து தெரிவித்து இருந்தது. இந்தநிலையில் கடந்த ஒன்றரை ஆண்டுகளில் பேருந்தில் எத்தனை பேர் இலவசமாக பயணித்துள்ளனர் என்ன விவரத்தை போக்குவரத்து துறை வெளியிட்டுள்ளது. அதில் 8.5.2021 முதல் 5.10.2022 வரை 176 கோடியே 84 லட்சம் மகளிர் பயணித்துள்ளதாக தெரிவித்துள்ளது. திருநங்கைகளை பொறுத்தவரை 10 லட்சம் பேரும்,  மாற்றுத்திறனாளிகள் 129 லட்சம் பேரும் பயணம் செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நாளொன்றுக்கு பயணம் செய்யும் மகளிர் எண்ணிக்கை சராசரியாக 39 லட்சத்து 21 ஆயிரம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மொத்த பயணிகளில் நாளொன்றுக்கு பயணம் செய்யும் மகளிர் 62 .90% என போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.  

இதையும் படியுங்கள்
சூர்யா சிவாவிற்கு கைலாசா தர்மரட்சகர் விருது வழங்கி கவுரவித்த நித்யானந்தா.! எதற்காக விருது தெரியுமா.?

click me!