தொடரும் வேலை நிறுத்தம்.! தமிழகம் முழுவதும் காலையிலேயே இத்தனை பேருந்துகள் இயக்கப்படுகிறதா.? வெளியான பட்டியல்

By Ajmal Khan  |  First Published Jan 10, 2024, 9:15 AM IST

போக்குவரத்து தொழிலாளர்கள் இரண்டாவது நாளாக வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், இன்று காலையிலேயே 98 சதவிகிதம் அளவிற்கு பேருந்தானது இயக்கப்படுவதாக போக்குவரத்து கழகம் அறிவித்துள்ளது. 
 


போக்குவரத்து தொழிலாளர்கள் வேலை நிறுத்தம்

15-ம் ஊதிய ஒப்பந்த பேச்சுகளை உடனடியாக தொடங்க வேண்டும், ஓய்வூதியர்களுக்கு கடந்த 96 மாதங்களாக வழங்கப்படாத அகவிலைப்படி உயர்வை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி போக்குவரத்து தொழிலாளர்கள் நேற்று முதல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் காரணமாக தமிழகத்தில் போக்குவரத்து சேவை பாதிக்கப்படும் என தகவல் வெளியானது. ஆனால் தொமுச உள்ளிட்ட சங்கத்தின் மூலமாகவும், தனியார் பேருந்து ஓட்டுநர்கள் மூலமாகவும் பேருந்தானது இயக்கப்பட்டு வருகிறது. இதன் காரணமாக தமிழகத்தில் நேற்று ஒரு சில இடங்களை தவிர பிற இடங்களில் போக்குவரத்து சேவை சீராக செயல்பட்டது. 

Latest Videos

தமிழகத்தில் இயக்கப்படும் பேருந்துகள் எத்தனை.?

இதனிடையே தொழிலாளர்களின் 6 கோரிக்கைகளில், 2 கோரிக்கைகளுக்கு தீர்வுகாணப்பட்டுள்ளது. மேலும் 2 கோரிக்கைகளை ஏற்க அரசுஒப்புக்கொண்டுள்ளது. மற்ற கோரிக்கைகளுக்கு குறிப்பிட்ட காலஅவகாசம் கேட்டகப்பட்டுள்ளதாக போக்குவரத்து துறை சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே இரண்டாவது நாளாக இன்றும் போக்குவரத்து தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். ஆனால் காலையிலேயே 98 சதவிகிதம் அளவிற்கு பேருந்து இயக்கப்படுதாக போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது.

தமிழகம் முழுவதும் எத்தனை பேருந்துகள் இயக்கப்படுகிறது என தகவலானது வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி மாநகர போக்குவரத்து கழகத்தில் 3233 பேருந்துகளில் 3177 பேருந்துகளானது இயக்கப்படுகிறது.  அரசு விரைவு போக்குவரத்து கழகத்தில் 37 பேருந்துகளில் 37 பேருந்துகளும் இயக்கப்பட்டு வருகிறது. விழுப்புரம் கோட்டத்தில் 2102 பேருந்துகளில் 2043 பேருந்து இயக்கப்படுகிறது.  

98% பேருந்துகள் இயக்கப்படுகிறது

சேலம் கோட்டத்தில் 1101 பேருந்துகளில் 1069 பேருந்துகளானது இயக்கப்படுகிறது. கோயம்புத்தூர் கோட்டத்தில் 2059 பேருந்துகளில் 1977 பேருந்துகள் இயக்கப்படுகிறது.  கும்பகோணம் கோட்டத்தில் 3001 பேருந்துகளில் 2925 பேருந்துகளானது இயக்கப்படுகிறது.  மதுரை கோட்டத்தில் 2069 பேருந்துகளில் 2044 பேருந்துகளானது இயக்கப்பட்டு வருகிறது.  திருநெல்வேலி கோட்டத்தில் 1624 பேருந்துகளில் 1616 பேருந்துகளானது இயக்கப்பட்டு வருகிறது.  ஒட்டுமொத்தமாக 15,226 பேருந்துகளில் 14 ஆயிரத்து 888 பேருந்துகள் இயக்கப்படுகிறது என போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது. 

இதையும் படியுங்கள்

இது ரொம்ப விஷப்பரீட்சை.. தமிழகம் முழுவதும் பணிமனைகளில் முற்றுகை போராட்டம்.. சிஐடியு சௌந்தரராஜன் அதிரடி!

click me!