காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும், பழைய ஓய்வூதியத் திட்டம், 15வது ஊதிய ஒப்பந்தத்தை இறுதி செய்ய வேண்டும் உள்ளிட்ட 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் சிஐடியு, அண்ணா உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட தொழிற்சங்கங்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
சென்னை மாநகர போக்குவரத்து தலைமை அலுவலகத்தை முற்றுகையிட்டு இன்று போராட்டம் நடைபெறும் என சிஐடியு மாநிலத்தலைவர் சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும், பழைய ஓய்வூதியத் திட்டம், 15வது ஊதிய ஒப்பந்தத்தை இறுதி செய்ய வேண்டும் உள்ளிட்ட 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் சிஐடியு, அண்ணா உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட தொழிற்சங்கங்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். ஆனால் தமிழக அரசு பொதுமக்களுக்கு பாதிப்பு இல்லாத வகையில் பேருந்து இயக்கப்பட்டு வருகிறது.
இதையும் படிங்க;- பிரச்சனைக்கு காரணமே அதிமுக தான்.. அவங்களோடு சேர்ந்து போராட்டம் நடத்துவது நியாயமா? அமைச்சர் சிவசங்கர்..!
இந்நிலையில், சி.ஐ.டி.யு மாநிலத் தலைவர் சௌந்தரராஜன் செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கையில்;- தமிழகம் முழுவதும் 40 சதவிகித பேருந்துகள் மட்டும் தான் இயக்கப்படுகிறது. 60 சதவிகித பணியாளர்கள் வேலைக்கு செல்லவில்லை. வெளி ஆட்களை வைத்து பல இடங்களில் பேருந்துகளை இயக்கி வருகிறார்கள். இது மிக மோசமான முடிவு. சட்டவிரோதமான நடவடிக்கை.
அதிமுக ஆட்சிக்காலத்தில் போக்குவரத்து தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டபோது வெளி ஆட்களை வைத்து பேருந்துகளை இயக்கியதற்கு திமுக எதிர்ப்பு தெரிவித்தது. ஆனால் தற்போது அவர்களே இதுபோன்ற நடவடிக்கையில் ஈடுபடுகிறார்கள். இதனால், விபத்துக்கள் ஏற்பட்டால் மிகுந்த பாதிப்பு ஏற்படும். திமுக அரசின் இந்த நடவடிக்கை விஷப்பரீட்சை.
இதையும் படிங்க;- Bus Strike : புஸ்வாணம் ஆன வேலை நிறுத்தம்.. தமிழகம் முழுவதும் பேருந்துகளை இயக்கி கெத்து காட்டும் தமிழக அரசு
கோரிக்கைகள் நிறைவேற்றப்படாத காரணத்தினால் போக்குவரத்து தொழிற்சங்கங்களின் வேலை நிறுத்த போராட்டம் தொடரும். சென்னையில் உள்ள பல்வேறு பேருந்து நிலையங்கள் மற்றும் பல்லவன் இல்லம் முன்பு இன்று காலை 10 மணிக்கு மேல் முற்றுகை போராட்டம் நடத்தப்படும். மேலும் தமிழ்நாடு முழுவதும் உள்ள பெரிய பேருந்து நிலையங்களிலும், பணி மனைகளிலும் இன்று முற்றுகை மறியல் போராட்டம் நடைபெறும் என்று தெரிவித்துள்ளார்.