
ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கடந்த 26 ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளனுக்கு வழங்கப்பட்ட பரோல் நாளை மறுநாள் முடிவடையும் நிலையில், மே 17 இயக்கத்தின் திருமுருகன் காந்தி பேரறிவாளனுடன் சந்தித்து ஆறுதல் கூறினார்.
ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கடந்த 26 ஆண்டுகள் பேரறிவாளன் சிறை தண்டனை அனுபவித்து வந்தார். இந்நிலையில் அவரது தந்தை குயில்தாசனுக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டதால், கடந்த மாதம் 24 ஆம் தேதி இரவு ஒரு மாத பரோலில் விடுதலை செய்யப்பட்டார்.
ஆனால் அவர் வெளி நிகழ்ச்சிகளில் பங்கேற்ககூடாது எனவும், ஜோலார் பேட்டை காவல்நிலையத்தில் தினமும் கையொப்பம் இட வேண்டும் என்ற நிபந்தனைகளின் பேரில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
இதைதொடர்ந்து ஜோலார்பேட்டையில் உள்ள தனது வீட்டில் தங்கி இருக்கும் பேரறிவாளனை, அரசியல் கட்சி பிரமுகர்கள், நடிகர்கள், இயக்குனர்கள் என பல்வேறு தரப்பினரும் சந்தித்து பேசி வருகின்றனர்.
பரோலில் வெளி வந்த நாளில் இருந்து நேற்று வரை, 1,657 பேர் பேரறிவாளனை சந்தித்துள்ளனர். பரோல் காலம் முடிய இன்னும் 2 நாட்கள் மட்டுமே உள்ள நிலையில், குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு விடுதலை செய்யப்பட்ட மே 17 இயக்கத்தின் திருமுருகன் காந்தி இன்று பேரறிவாளனை சந்தித்து ஆறுதல் கூறினார்.