
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டுக்குப் பிறகு , இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனரும், ஐபிஎல் சென்னை அணி உரிமையாளருமான என்.சீனிவாசனை ரகசியமாக சந்தித்தாக தற்போது செய்திகள் வெளியாகி உள்ளது
இதற்கு முன்னதாக தோனிக்கு , பத்ம பூஷன் விருதிற்காக பிசிசிஐ, அவருடைய பெயரை பரிந்துரை செய்துள்ளது குறிபிடத்தக்கது.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் சூதாட்டப் புகாரில் சிக்கியதால் இரண்டு ஆண்டுகள் விளையாட தடை விதிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து இரண்டு ஆண்டுகள் முடிவுற்ற நிலையில் , அடுத்த ஆண்டு ஐபிஎல் தொடரில் சென்னை அணி பங்கேற்கும் என தெரிகிறது
இந்நிலையில் சென்னை சூப்பர் சிங்ஸ் அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனி, அணியின் உரிமையாளரும் இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனருமான என்.சீனிவாசனை அவரது அலுவலகத்தில் ரகசியமாகச் சந்தித்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த தகவல் கிரிக்கெட் வட்டாரத்தில் சற்று சூடாக உள்ளது.மேலும் தோனியின் வருகையை இந்தியா சிமெண்ட்ஸ் ட்விட்டர் பக்கத்தில் அவர்களே பதிவிட்டுள்ளனர்
தற்போது இந்த புகைப்படம் தான் வைரலாக உள்ளது